Kamal-Nasar: நடிப்பில் கமலின் அனுபவத்திற்கு நிகராய் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தன் நடிப்பால் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர். மேலும் எந்த கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்டவர்.
அவ்வாறு இருக்க, தன் வில்லத்தனத்தால் படத்தில் கமலுக்கு டஃப் கொடுத்த நடிகர் தான் நாசர். இவர்கள் இருவரின் கூட்டணியில் பெரிதும் பேசப்பட்ட 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.
Also Read: ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி போல் தமன்னா நடித்த 5 படங்கள்.. ஆனா இப்ப ஐட்டம் நடிகையாக மாறிட்டாங்களே
குருதிப்புனல்: 1995ல் கமலின் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட படம் தான் குருதிப்புனல். இப்படத்தில் நாசர், அர்ஜுன், கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் நக்சலைட் தலைவனாய் பத்ரி கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருப்பார். அவற்றை அழிக்க ஆப்ரேஷன் தனுஷ் என்னும் அமைப்பில் அர்ஜுன் மற்றும் கமல் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் கமலுக்கு நிகராய் சண்டை காட்சிகளில் ஸ்கோர் செய்து இருப்பார் நாசர். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வணிக ரீதியான வசூலை பெற்று தந்தது.
தேவர் மகன்: பரதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமல், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பகை உணர்வை மேற்கொண்ட பங்காளியாய் கமலும் நாசரும் நடித்திருப்பார்கள். கடைசி வரை தன் பழிவாங்கும் முயற்சியால் பிரச்சனை செய்து வரும் மாயன், இப்படத்தில் கமலுக்கு இணையாக ஸ்கோர் செய்திருப்பார். இறுதியில் சக்தியால், மாயன் தலை வெட்டுப்படும் காட்சி மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
Also Read: ஆடியோ உரிமத்தில் அதிக வசூல் வேட்டை ஆடிய 5 படங்கள்.. பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய லியோ
உன்னால் முடியும் தம்பி: 1988 கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் உன்னால் முடியும் தம்பி. இப்படத்தில் ஜனகராஜ், கமலஹாசன், ஜெமினி கணேசன், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இளம் தலைமுறையினர்களுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகளை மேற்கொள்ளும் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். அதற்கு எதிர்மறையாக குடிப்பழக்கத்தை தூண்டும் ஒயின் ஷாப் உரிமையாளராய் நாசர் நடித்திருப்பார்.
அன்பே சிவம்: 2003ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அன்பே சிவம். இப்படத்தில் மாதவன், கமல் கிரண், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் மனிதநேயத்தை மேற்கொள்ளும் கதாபாத்திரத்தில் கமல் சிறப்புற நடித்திருப்பார். மேலும் கமல், கிரண் மீது கொண்ட காதலை வெறுக்கும் கதாபாத்திரத்தில் தன் நடிப்பினை தத்ரூபமாய் வெளிக்காட்டி இருப்பார் நாசர்.
அபூர்வ சகோதரர்கள்: 1989ல் வெளிவந்த இப்படத்தில் நாகேஷ், ஜெய்சங்கர், மனோரமா, கமல், மனோரமா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரியான தன் அப்பாவை கொலை செய்யும் கும்பலில் ஒருவரான நாசரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்யும் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக, நாசரின் வில்லத்தனம் இப்படத்தில் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.