புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பெயரே தெரியாமல் கொடூரமாக மிரட்டிய 5 வில்லன்கள்.. அசுரனை அடித்து துவைத்த பாலா சிங்

5 Villains In Tamil Cinema: ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகிறது என்றால் அதற்கு ஹீரோவுக்கு நிகராக வில்லனையும் ஸ்ட்ராங்காக போட வேண்டும். அதிலும் தங்களது பெயர் கூட பரிச்சயமாக விட்டாலும் அவர்களது வில்லத்தனத்தை கொடூரமாக காட்டி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த 5 வில்லன்கள் யார் என்பதை பார்ப்போம்.

விஷ்வம்: கார்த்தி, சுகன்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் சின்ன ஜமீன். இந்த படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்தப் படத்தில் நடித்த ரத்னவேல் என்ற வில்லன் கேரக்டர் தான். இதில் ரத்னவேலாக ஆர்பி விஷ்வம் நடித்திருந்தார்.

இதில் ராசையாவான கார்த்தியை சட்டபூர்வமான வாரிசாக்க விடாமல் அவருடைய மாமா ரத்னவேல் கையில் சித்திரவதைகளை அனுபவிக்கும் ஒரு அப்பாவியாக வளர்கிறார். இதில் ரத்தினவேல் ராசையாவை கொடூரமாக துன்புறுத்துவார். இதை பார்க்கும் போதே பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். அந்த அளவிற்கு ரத்னவேல் கேரக்டரில் விஷ்வம் சிறப்பாக நடித்தார். ஆனால் இன்றும் அவரது பெயர் விஷ்வம் என பலருக்கும் தெரியாது, சின்ன ஜமீன் ரத்னவேல் என்றே குறிப்பிடுகின்றனர்.

விஷ்வம்

R-P-Viswam-cinemapettai
RP-Viswam-cinemapettai

Also Read: எடுபடாமல் போன லியோ, பவரை காண்பித்த ஜெயிலர்.. அனிருத் பக்கம் திரும்பிய கத்தி

திலகன்: விஜயகாந்த், பானுப்பிரியா, ரேவதி நடிப்பில் 90களில் சிறப்பான வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்றுதான் சத்ரியன். இந்தப் படத்தில் பன்னீர் செல்வமாக நடித்த விஜயகாந்த் கண்ணிலே விரலை விட்டு ஆட்டியவர் தான், அந்தப் படத்தில் அருமை நாயகம் என்ற கேரக்டரில் நடித்த திலகன். இவருடைய மிரட்டலான நடிப்பு இன்றும் அந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு பயமுறுத்தும் அளவுக்கு இருக்கும்.

திலகன்

Thilakan-cinemapettai
Thilakan-cinemapettai

பாலா சிங்: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை. இந்த படத்தில் அன்பு என்ற கேரக்டரில் நடித்த பாலா சிங் தன்னுடைய மோசமான வில்லத்தனத்தை காட்டினார்.

அதிலும் தனுஷை இவர் இந்தப் படத்தில் அடித்து துவைத்து எடுக்கும் காட்சி பார்ப்பவர்களையே நடுநடுங்க வைத்தது. இவர் இந்த படத்தில் மட்டுமல்ல கிரீடம் படத்தில் மாசிலாமணி, வேட்டைக்காரன் படத்தில் ராஜசேகர், மதராசபட்டினம் படத்தில் துரைசாமி போன்ற படங்களிலும் குணசத்திர வேடங்களிலும் எதிர்மறை கேரக்டர்களிலும் நடித்து அசத்தியவர். இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவரது பெயர் பாலா சிங் என்று இன்றுவரை அவ்வளவாக யாருக்கும் தெரியாது.

பாலா சிங்

bala-shing-1-cinemapettai
bala-shing-1-cinemapettai

Also Read: சுயலாபத்திற்காக சூப்பர் ஸ்டாரை சீண்டும் விஜய்.. என்ன கட்டம் கட்டினாலும் உங்க பாட்ஷா பலிக்காது

டைகர் பிரபாகர்: பிரபல கன்னட நடிகரான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாண்டியன் மற்றும் முத்து போன்ற படங்களில் முரட்டுத்தனமான வில்லனாக தோன்றியவர். அதிலும் முத்து படத்தில் மீனாவை முடியை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போகும் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்தார். இந்த காட்சிக்குப் பிறகு முத்துவாக நடித்த சூப்பர் ஸ்டார் உடன் அவர் போடும் சண்டைக் காட்சியில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தார்.

டைகர் பிரபாகர்

tiger-prabhakar-cinemapettai
tiger-prabhakar-cinemapettai

ராமி ரெட்டி: தெலுங்கு நடிகரான இவரும் தமிழில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து மிரள விட்டவர். அம்மன், தடயம், நெஞ்சினிலே போன்ற படங்களில் மோசமான வில்லனாக நடித்தார். அதிலும் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் நடிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆன படமான அம்மன் படத்தில், வில்லனாக நடித்த ராமி ரெட்டி ‘ஜண்டா’ என இவர் கூறும் வசனங்கள் கேட்பதற்கே பயமுறுத்தும் அளவுக்கு இருக்கும். அம்மன் பட வில்லன் என்று தான் இன்னமும் இவரை அழைக்கின்றார்களே தவிர, இவரது நிஜப் பெயர் அவ்வளவாக யாருக்கும் தெரியாது.

ராமி ரெட்டி

Rami-Reddy-cinemapettai
Rami-Reddy-cinemapettai

Also Read: நெல்சனை வைத்து பக்காவாக காய் நகர்த்திய ரஜினிகாந்த்.. இந்த 3 படங்களையும் ஓரங்கட்டிய ஜெயிலர்

Trending News