திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எதிர்நீச்சல் குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான 5 வில்லன்கள்.. ஈடு கொடுக்க முடியாத மாரிமுத்துவின் இடம்

Ethirneechal: இவர் இல்லை என்றால் எதிர்நீச்சல் சீரியலே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு தனக்கான இடத்தை பிடித்த மாரிமுத்து இன்று நம்முடன் இல்லை. மாரடைப்பின் காரணமாக திடீரென அவர் உயிரிழந்தது ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் வேதனைப்படுத்தி இருக்கிறது.

இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் அனைவரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை இப்போது சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இனி மேல் அவருடைய இடத்தை சீரியலில் யார் நிரப்புவார்கள் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

Also read: இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி

உண்மையில் இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஏனென்றால் ஆதி குணசேகரன் என்றாலே மாரிமுத்து தான் நம் நினைவில் நிற்கிறார். அவருடைய இடத்தில் வேறு யாரையும் வைத்து நம்மால் யோசிக்க கூட முடியாது. ஆனாலும் வேறு வழி இல்லை இப்போது அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகர் வந்து தான் ஆக வேண்டும்.

அந்த வகையில் 5 பிரபலங்கள் அவருடைய கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள் என்ற ஒரு கருத்து இப்போது எழுந்துள்ளது. அதன்படி கயல் சீரியலில் தர்மலிங்கம் கேரக்டரில் மிரட்டும் முத்துராமன், தலைவாசல் விஜய், இளவரசு, மகாநதி சங்கர், பப்லு பிரித்விராஜ் ஆகியோர் பரிசீலிக்க பட வாய்ப்பு இருக்கிறது.

Also read: உயிரை காப்பாற்ற தானே மருத்துவமனைக்கு கார் ஓட்டிய மாரிமுத்து.. கடைசி நிமிடங்களில் நடந்தது இதுதான்

இருந்தாலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் முன்பு போல் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான். இப்படித்தான் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு வி ஜே சித்ராவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் அவருடைய இறப்புக்கு பிறகு அந்த கேரக்டரில் நடித்த காவ்யா பாதியிலேயே விலகினார்.

அதை தொடர்ந்து தற்போது நடிக்கும் லாவண்யாவும் முல்லையாக பெரிய அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை. அப்படி ஒரு நிலை தான் குணசேகரன் கதாபாத்திரத்திற்கும் வந்திருக்கிறது. இருந்தாலும் யார் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Also read: போன வாரம் விஜய் டிவியில் கலந்துகொண்ட 2 பிரபலமும் மரணம்.. நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட சூனியம்!

Trending News