ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

டெரர் நடிப்பு என சிரிப்பு மூட்டிய 5 வில்லன்கள்.. அஜித்தின் புகழை மட்டுமே பாடும் துரோகி

Villains turn into comedian: பொதுவாகவே திரைப்படங்கள் எடுத்துக்கொண்டால் ஹீரோக்களுக்கு இணையாக இருப்பவர்கள் வில்லன்கள். அவர்கள் வந்தாவே பயங்கர ஆக்ரோஷமாக, பயப்படும் அளவிற்கு இருப்பார்கள். ஆனால் சிலர் அதற்கு நேர் மாறாக வில்லன் என்ற பெயரில் மொக்கை வாங்கி, காமெடியன் ஆகிய 5 பேர் யார் என்பதை பார்க்கலாம்.

விவேக் ஓபராய்: 2017ல் சிவா இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்தது தான் விவேகம். அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் போன்றோர் இணைந்து நடித்துள்ளனர். ஏஜென்ட்க்கும் மாபியா கும்பலுக்கும் நடுவே நடக்கும் மோதல்களை மையமாக கொண்டு இருக்கும் திரைப்படம். விவேக் ஓபராய் வில்லனாக ஆரம்பத்தில் இருந்து பயங்கர மாசாக வருவார். அனால் இவரே அஜித்திற்கே ஹைப் அதிகமாக கொடுத்து, கடைசில் டம்மி ஆகிவிடுவார். பின்னர் முடிவில் அஜித் அவரை கலாய்த்து மொக்கை வாங்க வைக்கும் அளவிற்கு மாறிவிட்டார்.

Also Read:இந்த ஸ்டைலில் படம் பண்ணுங்க.. கமல் வார்த்தையால் எரிச்சலான எச்.வினோத்

தேவ் கில்: எஸ்பி ராஜ்குமார் கூட்டணியில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் சுறா. இதில் தமன்னா, வடிவேலு போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் மீன் பிடி தொழிலாளியாக இருக்கும் ஹீரோ மினிஸ்டரை எதிர்த்து போராடி தனது மக்களுக்கு நல்லது செய்வதே கதையாகும். இதில் தேவ் வில்லனாக நடித்தது, எதுவுமே இவருக்கு சரிப்பட்டு வரவில்லை. சுத்தமா செட் அகல இப்படி நடிப்பது, இதுனாலையே இறுதியில் ஹீரோ அவரை பங்கம் செய்திருப்பார்.

விஜய் ராஜ்: துரை செந்தில் முருகன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் காக்கி சட்டை இதில் விஜய் ராஜ் வில்லனாக நடித்திருப்பார். இவர் ஹிந்தியில் பிரபலமான இயக்குனர், எழுத்தாளரும் கூட.
90களில் இருந்து இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். பம்பல் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஊழல் செய்யும் அரசியல்வாதியாக இந்த திரைப்படத்தில் நடிப்பார். இவர் என்னதான் சீரியஸ் அகா நடித்து இருந்தாலும், இவரை இந்த படத்தில் ஒரு காமெடியனாகவே மாற்றி விட்டு டம்மி ஆகியிருப்பார்கள்.

Also Read:35 வருட சினிமா வாழ்க்கையில் மாரிமுத்து சொத்து மதிப்பு.. குணசேகரனுக்கு வாரி வழங்கிய சன் டிவி

பாபி சிம்ஹா: மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் கிட்நாபர், வில்லன் போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களில் நடிப்பார். ஹரி இயக்கத்தில் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் சாமி 2 , இதில் ராவணன் ராவண பிச்சையாக நடித்திருப்பார். ஆனால் இவரை இத்திரைப்படத்தில் ஒரு வில்லனாகவே மதிக்காமல், வயகமான வில்லத்தனம் எதுவும் இல்லாமல் கோமாளியாக மாற்றி டேமேஜ் செய்து இருப்பார்கள்.

வினய்: உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வினய் ராய். இவர் ஆரம்பத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆன ஹீரோவாக இருந்தார்.போகப் போக 2017க்கு பிறகு இவர் வில்லனாக நடிக்க தொடங்கினார். டாக்டர், கிறிஸ்டோபர் போன்ற திரைப் படங்களில் வில்லதனமாக நடித்துள்ளார். இப்படி பயங்கரமாக இருந்த இவரை பாண்டியராஜ் இயக்கத்தில் 2022-ல் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வைத்து செய்து ஜோக்கர் ஆக்கியது. இவரின் வில்லத்தனமான நடிப்புக்கே முடிவுக்கட்டு போல் அமைந்தது.

Also Read:கிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்ட 5 பிரபலங்கள்.. இவர்கள் செய்த தவறு என்ன?

Trending News