வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

5 வருட தோல்வி, விஷாலை தூக்கி விட்ட இயக்குனர்.. முதல் ஆளாக அனகோண்டா செய்த வேலை

Vishal: சரியான டர்னிங் பாய்ண்ட் அமைந்தால் ஒருவருடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்வார்கள். அது போல தான் மார்க் ஆண்டனி என்கிற வெற்றி படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு பிறகு கூட்டணி வைக்கப் போகும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். அப்படிப்பட்ட இவர் கேரியரில் அடுத்தடுத்து முன்னேறி வரும் பொழுது திருமண வாழ்க்கையிலும் செட்டில் ஆகிவிட்டார். அதாவது சிவாஜி குடும்பத்தின் மருமகனாக ஆகிவிட்டார்.

பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் கல்யாண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ஏற்பட்ட காதல் தற்போது குடும்பத்தில் இருப்பவர்கள் சம்மதத்துடன் கல்யாணத்தில் முடிந்து விட்டது.

Also read: ஆதிக் மடியில் விழுந்த ஏகே 63 பட வாய்ப்பு.. அஜித் நண்பர் கொடுத்த சர்டிபிகேட்

இன்று காலை சென்னையில் வைத்து மிகக் கோலாகலமாக பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பங்ஷனுக்கு போய் கொண்டிருக்கிறார்கள். இதில் முதல் ஆளாக ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்க ஓடோடி போயிருக்கிறார் மார்க் ஆண்டனி ஹீரோ விஷால்.

கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கும் மேல் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இவருக்கு செகண்ட் இன்னிங்ஸில் கை கொடுத்து தூக்கி விட்டவர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். அந்த வகையில் ஆதிக் திருமணத்திற்கு சென்று ஆதிக் ரவிச்சந்திரனை சந்தோஷத்தில் கட்டி தழுவி மனதார வாழ்த்து தெரிவித்து வந்திருக்கிறார்.

ஏனென்றால் விஷால் உடைய கேரியருக்கு மிகப்பெரிய ஒளிவட்டத்தையே அமைத்துக் கொடுத்தவர் ஆதிக் தான். இவரை தொடர்ந்து லெஜன்ட் சரவணா, அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் பிரபு உடன் இணைந்து நடித்த 80ஸ் ஹீரோயின்கள் அனைவரும் சென்று திருமணத்தை இன்னும் ஆரவாரப்படுத்தி கொண்டாடி இருக்கிறார்கள்.

Also read: வெள்ளத்தில மாட்டிகிட்டேன்னு சொன்னது ஒரு குத்தமா.? விஷால் போட்ட வீடியோவுக்கு பதிலடி கொடுத்த மேயர்

Trending News