ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

5 வருட லிவிங் டுகெதர், மதமாற்றம்.. புது நடிகையின் மோகத்தால் புளித்துப்போன கர்ப்பிணி மனைவி

பெற்றவர்களுக்கு தெரியாமல் பயந்து பயந்து காதலித்த காலம் போய் இப்போது லிவிங் டுகெதர் வாழ்க்கை சகஜமாக மாறிவிட்டது. அதிலும் திரையுலகில் இது போன்ற விஷயங்கள் ஒரு பேஷனாகவே இருக்கிறது. ஆனால் இந்த வாழ்வு பிரச்சனை இல்லாமல் சுமூகமாக இருக்குமா என்றால் அதுதான் கிடையாது.

ஐந்து வருடமாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒரு ஜோடி தற்போது காவல்துறை வரை சென்றது தான் சின்னத்திரையில் பரபரப்பு செய்தியாக இருக்கிறது. பிரபல சேனலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த இளம் நடிகர் ஐந்து வருடங்களுக்கு முன்பு உடன் நடித்த சீரியல் ஹீரோயினை தீவிரமாக காதலித்து இருக்கிறார்.

Also read : ஹீரோயினாக ஆசைப்பட்டு 25 பேரை அட்ஜஸ்ட் செய்த நடிகை.. குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு தனிமரமான பரிதாபம்

திருமணம் செய்து கொள்ளாமலே அவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவே நடிகரும் மதம் மாறினால் தான் திருமணம் என்று ஒரு குண்டை போட்டு இருக்கிறார். காதல் மயக்கத்தில் இருந்த நடிகையும் உடனே மதம் மாறி திருமணம் செய்து இருக்கிறார். அதன் பிறகு தான் வினையே ஆரம்பித்திருக்கிறது. நன்றாக சென்று கொண்டு இருந்த அவர்களின் திருமண வாழ்வு தற்போது ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி கொண்டிருக்கிறது.

திருமண விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்று நினைத்த நடிகர் தன் மனைவியிடம் இதை கண்டிஷனாகவே சொல்லி இருக்கிறார். சில காலங்கள் அமைதியாக இருந்த மனைவி தற்போது திருமண போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள்ளாகவே நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற ஒரு புது செய்தியும் பரவியது.

Also read : நகைகளை கொடுத்து நடிகையை கரெக்ட் செய்த தொழிலதிபர்.. அம்பலமான குடும்ப குத்துவிளக்கின் ரகசியம்

இந்நிலையில் நடிகர் வேறொரு ஹீரோயின் உடன் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக தன் மனைவியை தவிர்த்து வருகிறாராம். ஏற்கனவே விவாகரத்து ஆகி புது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நடிகைக்கு இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அதன் காரணமாக கணவனிடம் நியாயம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் தன் புது காதலியுடன் சேர்ந்து கொண்டு தன் மனைவியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.

தற்போது இந்த விவகாரம் காவல் துறை வரை சென்றிருக்கிறது. காதலித்து மதம் மாற்றி, திருமணம் செய்துவிட்டு தற்போது கர்ப்பிணி மனைவியை தவிர்த்து வரும் நடிகரை பற்றி தான் தற்போது ஒரே பேச்சாக கிடக்கிறது. புது காதலி வந்தவுடன் மனைவி புளித்து விட்டார் போல என்று பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

Also read : சாக்கடையில் மூழ்க துடிக்கும் சில்வர் ஜூப்ளி இயக்குனர்.. நாசுக்காக தூண்டில் போடும் பெரிய முதலைகள்

Trending News