சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் ஒரு காலத்திற்குப் பிறகு வெளிநாட்டு தொழிலதிபர் போன்றவர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகின்றனர். அதுவே துணை நடிகைகளாக இருப்பவர்கள் சிலருக்கு ரகசிய மனைவியாக இருந்து காலத்தை ஓட்டுகின்றனர்.
அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்ட நடிகை ஒருவர் தற்போது ஏமாந்து போய் கதறிக் கொண்டிருக்கிறார். பிரபல புள்ளி ஒருவருக்கு ஆசை நாயகியாக ஐந்து வருடங்கள் குடித்தனம் நடத்தியவர் தான் அந்த துணை நடிகை. பிரபல நடிகரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதன் பிறகு சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இவரிடம் ஒரு பிரபலம் நெருக்கமாக பழகி இருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை, குட்டி என்று வாழ்ந்து வரும் அவர் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி கொடுத்து ரகசியமாக வாழ்ந்திருக்கிறார்.
அதை நம்பிய நடிகையும் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார். இதனால் அவர் மூன்று முறை கர்ப்பம் தரித்திருக்கிறார். ஆனால் இது எங்கே பிரச்சனையில் முடிந்து விடுமோ என்று நினைத்த அந்த பிரபலம் திருமணம் செய்த பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்று கருவை கலைக்க சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.
அதை நம்பிய அந்த நடிகையும் மூன்று முறை தன் கருவை கலைத்திருக்கிறார். தற்போது ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில் அந்த பிரபலம் நடிகையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருக்கிறார். இதனால் பதறிப்போன அந்த நடிகை அந்த பெரும் புள்ளியிடம் நியாயம் கேட்டு கதறி வருகிறாராம். வாய்ப்பு இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த நடிகை பற்றி தான் தற்போது பலரும் பரிதாபமாக பேசி வருகின்றனர்.
Also read:கள்ள உறவுக்காக 14 வயது நடிகையை பலிகொடுத்த அம்மா.. அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கேவலம்