திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்த 5 ஹீரோக்களை கலாய்க்கவே தியேட்டருக்கு சென்ற இளசுகள்.. நம்பர் ஒன் இடத்தை பிடித்தது லெஜெண்ட் அண்ணாச்சி

கோலிவுட்டில் மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு என்று திரையரங்குகளில் கூட்டமானது அலைமோதும் என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ரசிகர்கள் சினிமாவில் ஒரு சில நடிகர்களை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளாமல் டம்மி பீஸ் ஆக ஆக்கி விடுகின்றனர்.  அப்படியாக அவர்கள் நடித்த படங்களை திரையரங்குகளுக்கே சென்று இளசுகள் கலாய்த்துள்ளனர். அந்த 5 ஹீரோக்கள் யார் என்பதை இங்கு காணலாம்.

டி.ராஜேந்திரன்: 2007 ஆம் ஆண்டு டி.ராஜேந்திரன் நடிப்பில் உருவான அதிரடி திரைப்படம் தான் வீராச்சாமி. இப்படத்தில் இவர் பேசும் வசனங்களும், இவரின் உடல் அசைவுகளும்மே பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தும் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது அடுக்கு மொழியான வசனங்களால் தெறிக்க விட்டிருப்பார்.

Also Read: டி.ராஜேந்தர், பாக்யராஜ் போல வளர முடியாமல் போன நட்சத்திரம்.. பன்முகத் திறமை இருந்தும் புகழடையாமல் போன பரிதாபம்

சினேகன்: இயக்குனர் எஸ் பிரேம்நாத் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் உயர்திரு 420. இதில் பாடலாசிரியர் சினேகன், மோகனராஜ், அக்சரா கௌடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் சிநேகனின் நடிப்பை கலாய்க்குவதற்காகவே ரசிகர்கள் இப்படத்திற்காக திரையரங்கிற்கு சென்றனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன்: இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆனந்த தொல்லை. இதில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், வாணி விஸ்வநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் இவரின் நடிப்பானது  ரசிகர்களின் மத்தியில் கேலிக்கைகளை உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தது. அதிலும் படத்தில் இவர் நடிக்கும் காட்சிகளை கூட ரசிகர்கள் மீம்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் வெளியீட்டும் வருகின்றனர்.

Also Read: 150 பேருக்கு வேலை, 50 லட்சம் சம்பளம்.. தன் தலையில் தானே மண்ணை வாரி போட்ட பவர் ஸ்டார்

சாம் ஆன்டர்சன்: இயக்குனர் ஜோ ஸ்டேன்லி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யாருக்கு யாரோ. இதில் சாம் ஆன்டர்சன், ஜோதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிலும் ரசிகர்கள் இவரை ஒரு ஹீரோவாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும் நிலையில் இவர் எப்படி இந்த படத்தில் நடித்துள்ளார் என்று  கிண்டலடித்து வருகின்றனர்.

சரவணன் அருள்: இயக்குனர் ஜே.டி ஜெர்ரி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தி லெஜன்ட். இதில் அண்ணாச்சி சரவணன் அருள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் காமெடி பீஸ் ஆன தோற்றத்தைக் கொண்டுள்ள இவர் இப்படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இதற்காகவே இவரை வெச்சு செய்வதற்கு இவரின் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று திரையரங்கிற்கு  கூட்டம் கூட்டமாக போனார்கள்.

Also Read: அண்ணாச்சியை வச்சி நம்மளும் சம்பாதிப்போம்.. காசுக்காக விஜய் டிவி செய்யும் வேலை

Trending News