Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

500 கோடி பிரீ பிஸ்னஸ் ஆனதெல்லாம் பத்தாது.. ரெட் ஜெயண்ட் உதயநிதியிடம் தஞ்சமடைந்த லியோ படக்குழு

500 கோடி பிரீ பிஸ்னஸ் ஆனதெல்லாம் பத்தாது.. ரெட் ஜெயண்ட் உதயநிதியிடம் தஞ்சமடைந்த லியோ படக்குழு

கோடிக்கணக்கில் பிரீ பிசினஸ் ஆனதெல்லாம் முக்கியமில்லை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதியிடம் தஞ்சமடைந்த லியோ படக்குழு.

விஜய்யின் லியோ படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் நிலவுகிறது. இதனால் தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் இந்த படத்திற்கான வசூலை வாரி குவிக்க வேண்டும் என படக்குழு பக்கா பிளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுவதால் மற்ற படங்கள் தள்ளிப் போகின்றது. இதனால் சோலோவாக தளபதி விஜய் திரையரங்கில் மாஸ் காட்டப் போகிறார். ஏற்கனவே இந்த படம் 500 கோடி பிரீ பிசினஸ் ஆன நிலையில், அதெல்லாம் பத்தாது என்று படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், தமிழகத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதியிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

தற்போது படு பயங்கரமாக லியோ படத்தின் பிசினஸ் வேலைகளை பார்த்து வருகிறது படக்குழு.  500 கோடிகளுக்கு மேல் வசூலை பார்த்து விட வேண்டும் என்று ஒரு பெரிய பிளான் போய்க்கொண்டிருக்கிறது. லலித் இந்த படத்தின் வியாபார யுக்திகளை கையாண்டு வருகிறார்.

இவ்வளவு கோடிகள் பிசினஸ் பண்ண வேண்டும் என்றால், அதற்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் சரியான தேர்வு என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் லலித். 85 சதவீதம் தியேட்டரிக்கல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இடம் தான் இருக்கிறது. அதனால் நிச்சயமாக இந்த படத்தை உதயநிதி அண்ட் கோ தான் தமிழகத்தில் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தாறுமாறான வசூலை குவித்தது. அதே அளவிற்கு லியோ படமும் இருக்கும் பட்சத்தில் வசூலில் எட்ட முடியாத சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே லியோ படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் சரக்கு அதிகமாக இருப்பதால், இந்த படம் நிச்சயம் அசால்ட்டாக 500 கோடியை தட்டி தூக்கும் என்று படக்குழு பெரும் கனவுடன் காத்திருக்கிறது. இதற்கு ஒரே வழி படத்தை அப்படியே தூக்கி உதயநிதி அண்ட் கோ-விடம் கொடுத்து விட்டால் நல்ல வியாபாரம் பார்த்து விடலாம் என்றும் லலித் முடிவெடுத்துள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.