சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சகுனி, சாணக்கியன் என கொளுத்தி போட்ட ரஜினி.. வேண்டாததை பேசி ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்

வேட்டையன் ஆடியோ லான்ச் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கிட்டத்தட்ட 55 நிமிடங்கள் பேசினார் ரஜினிகாந்த். எப்பொழுதுமே சூப்பர் ஸ்டாரின் பேச்சு சுவாரசிய மிகுந்ததாக இருக்கும், நேற்றும் அப்படித்தான்.

இந்த படத்தில், ஞானவேலுக்கு பின் படத்தை தூக்கி நிறுத்தி இருப்பது அனிருத் தான் என்று கூறினார். இளையராஜாவையும் ,ஏஆர் ரகுமானையும் ஒரே ரூபத்தில் காண்கிறேன் என்று அனிருத்தை உயர்த்தி பேசினார். ஜெய் பீம் படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அதிலிருந்து ஞானவேலுவை சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் என்று கூறினார்.

வேண்டாததை பேசி ஷாக் கொடுத்த சூப்பர் ஸ்டார்

வழக்கம்போல் போற போக்கில் பணம் ஒரு விசயமே இல்லை என்று கூறிவிட்டார். அது மட்டும் இன்றி பணம் ஒரே இடத்தில் இருந்தால் கெட்டுப் போய்விடும் என்று கூட நேற்று பேசினார். இப்படி 55 நிமிடமும் இவர் பேசியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

அசுரன் படத்தில் தான் மஞ்சுவாரியரை வயதான கதாபாத்திரத்தில் பார்த்ததாகவும், அதன் பின் இந்த படத்தில் தலதலவென்று ஒரு ஹீரோயினாக பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது எனவும் பேசி மொத்த மேடையையும் அதிர வைத்தார்.

சகுனிகள் நிறைந்த இந்த உலகத்தில் நியாயமாய் வாழ்வது மிகவும் கடினம். சாணக்கியனாய் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசி அரங்கத்திற்கு ஷாக் கொடுத்தார். எப்பொழுதுமே பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத ரஜினி இந்த முறையும் பணம் ஒரு பொருட்டில்லை, அதன் பின்னால் ஓடாதீர்கள் என்று பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

Trending News