பாலிவுட் திரை உலகமே கடந்த சில வருடங்களாக ஒரு படம் கூட 200 கோடி வசூலை தொட முடியாமல் ஏகப்பட்ட பிளாப்களை சந்தித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவர் மிகப்பெரிய இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்திருக்கிறார். சத்தியமா இத எதிர்பார்க்கல என அவரே அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.
ஏனென்றால் 58 வயதானாலும் கட்டுமஸ்தாக இருக்கும் அந்த பாலிவுட் டாப் ஹீரோ கடந்த நான்கைந்து வருடமாக தொடர் தோல்வி கொடுத்து வந்த நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். அதனால் நடிப்பை விட்டுவிட்டு மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ளவில்லை வயதாகிவிட்டது என்று நினைத்து ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று முடிவில் இருந்தாராம்.
இந்த படத்தில் கடைசியாக நடிக்கலாம் என்று எதர்ச்சியாக நடித்தாராம். படம் எதிர்பார்க்காத வெற்றி 700 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட்-க்கு வந்திருந்த அந்த படத்தின் கவர்ச்சி கதாநாயகி அந்த பாலிவுட் நடிகருக்கு பப்ளிக்காகவே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
ஏற்கனவே இந்த ஜோடிகள் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தாலும் இந்த அளவுக்கு கல்லா கட்டவில்லை. ஆகையால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க தற்போது பட குழு தீவிரமாக ஆர்வம் காட்டி கொண்டி ருக்கின்றனர்.
Also Read: காதல் கணவருக்கு வக்காலத்து வாங்கிய நடிகை.. கண்டுக்காமல் டீலில் விட்ட ஹீரோ
இதனால் அதிக மகிழ்ச்சியில் ஆட்டம் போடும் அந்த பாலிவுட் நடிகர் ஏற்கனவே முடிவு செய்திருந்த ஹோட்டல் தொழிலை கைவிட்டு, மறுபடியும் இளமை தொல்லலுடன் புது முயற்சிகளில் கண்டிப்பாக நடிப்பேன் மக்கள் என்னை கைவிடவில்லை எனக் கூறியிருக்கிறார்.