வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

90களில் கவர்ச்சிக்காகவே வாய்ப்பை பெற்ற 6 நடிகைகள்.. கமல் சூரசம்ஹாரம் செய்த ஹீரோயின் நிரோஷா

Glamour Actress: தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டம் என்பது கிளாமர் ஹீரோயின்கள் இல்லாமல் ஹீரோயின்களே தாராளமாக கவர்ச்சி காட்டி படங்கள் நடித்த நேரம். அதிலும் இந்த ஆறு ஹீரோயின்கள் எக்கச்சக்கமாக கவர்ச்சி காட்டி அதற்காகவே பட வாய்ப்புகளையும் பெற்றார்கள். படத்தில் ஹீரோயினுக்கு கேரக்டர் இல்லை என்றாலும் கிளாமர் வைத்து ஓட்டிவிடலாம் என்று நினைத்த நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த ஹீரோயின்களுக்கு அதிக பட வாய்ப்புகளையும் கொடுத்தார்கள்.

ரஞ்சிதா: நடிகை ரஞ்சிதா நிறைய படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அதையும் தாண்டி கவர்ச்சியிலும் தாராளம் காட்டியவர். ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் கிளாமருக்காக மட்டுமே ஹீரோயினாக நடித்தார். அதே போன்று நிறைய கிளாமர் பாடல்களிலும் குத்தாட்டம் போட்டு இருக்கிறார் இவர். அதே சமயத்தில் பல முன்னணி ஹீரோக்களுடனும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Also Read:வாய்ப்புக்காக நடிகர்களுக்கு வலை விரித்த நடிகை.. அந்தரங்க வேலை செய்ததை ஒப்புக்கொண்ட பகீர் சம்பவம்

ஐஸ்வர்யா: நடிகை ஐஸ்வர்யா தற்போது பன்முக திறமை கொண்டவராக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் வளர்ந்து வந்த காலத்தில் கிளாமருக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எஜமான் திரைப்படத்தில் கூட இதற்காகவே இவருக்கு ஒரு கேரக்டரும் கொடுக்கப்பட்டது.

சிவரஞ்சனி: நடிகை சிவரஞ்சனி நல்ல அழகும், திறமையும் கொண்ட நடிகை. இருந்தாலும் கவர்ச்சியிலும் அதிக தாராளம் காட்டியிருக்கிறார். சின்ன மாப்ளே, வண்டிசோலை சின்ராசு போன்ற படங்களில் இவர் கொஞ்சம் ஓவராகவே கிளாமராக நடித்திருப்பார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு பெட்ரமாஸ்க் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

மந்த்ரா: நடிகை மந்த்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர். 90களின் காலகட்டத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்த ஹீரோயின் இவர். முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய், பிரசாந்த், கார்த்திக், சத்யராஜ் போன்ற நடிகர்களின் படங்களில் கிளாமர் ரோலில் நடித்திருக்கிறார்.

Also Read:மில்க் நடிகையே கதி என்று கிடந்த மூன்றெழுத்து வில்லன்.. விவாகரத்திற்கு பின்னால் இருக்கும் காரணம்

பல்லவி: நடிகை பல்லவி குணச்சித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் நடை போட்டு கொண்டிருந்த நேரத்தில், கிளாமரில் கூட தாராளம் காட்டினார். கிளாமருக்காகவே நிறைய படங்களில் இவருக்கு வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பிட்ட காலகட்டத்தில் பல்லவி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கொண்டிருந்தார்.

நிரோஷா: நடிகை நிரோஷா, 90களின் டாப் ஹீரோயினாக இருந்த ராதிகாவின் தங்கையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், கிளாமரில் அவரையே தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கமலுடன் நடித்த சூரசம்ஹாரம் திரைப்படத்தில் எல்லா காட்சிகளுமே ஓவர் கவர்ச்சியாகவே இருக்கும். இந்த படத்தில் “நான் என்பது நீ அல்லவா” என்ற ஒரு பாடல் வரும். பாடல் ரசிக்கும் விதமாக இருந்தாலும், பாடல் காட்சிகளை கண் கொண்டு பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கமலுடன் சேர்ந்து கிளாமர் காட்சிகளில் நடித்திருப்பார் நிரோஷா.

Also Read:2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

Trending News