செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

OTT ஹீரோக்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரு வழியா தளபதி 68ல் இணைந்த அஜ்மல்

6 Actors Branded as OTT Heroes: இளம் நடிகர்கள் சிலர் திறமைசாலிகளாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காமல் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனார்கள். இதனால் தங்களுடைய திறமையான நடிப்பை வெப் சீரிஸ்களில் நடித்து தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர். அப்படி ஓடிடி ஹீரோக்களாகவே இளம் 6 ஹீரோக்கள் முத்திரை குத்தப்பட்டு இருக்கின்றனர்.

ஜெய்: பகவதி படத்தில் தளபதியின் தம்பியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு வெகு சீக்கிரமே பரீட்சியமானவர்தான் ஜெய். அதன் தொடர்ச்சியாக சென்னை 600028, சுப்ரமணியபுரம், சரோஜா என வரிசையாக பட வாய்ப்புகள் ஜெய்-க்கு கிடைத்தது. ஆனால் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியாக வருவதில்லை, வந்தாலும் கதாநாயகிகளை டேட்டிங் செய்வதில் தான் குறியாக இருந்ததால் தயாரிப்பாளர்கள் கடுப்பானார்கள்.

இதனால் இவருக்கு இப்போது வெள்ளித் திரையில் பட வாய்ப்புகளே அமைவதில்லை. இதனால் தற்போது ஓடிடி-இல் வெளியாகும் வெப் சீரிஸ்களில் வரிசையாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் லேபில் ஒரிஜினல் சீரிஸ் டிஸ்னி பிளஸ்ஹாட்ஸ்டாரில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் வெளியாகிறது. சமீபத்தில் ஜெய் நடித்த லேபிள் என்ற படமும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது.

வெற்றி: எட்டு தோட்டாக்கள் போன்ற தனது சொந்த குடும்ப தயாரிப்பு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகர் வெற்றி. ஜிவி என்ற திரில்லர் படத்தில் நடித்த வெற்றி அதன் பின்பு ஓடிடி படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். இவர் நடித்த ஜோதி என்ற படம் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக ‘ஜிவி 2’ படமாக்கினார். பின்னர் 2023ல் அவர் நடித்த மெமரிஸ் மற்றும் பம்பர் போன்ற படமும் ரிலீஸ் ஆனது.

Also Read: 24 மணி நேரமும் விஜய் புராணம் தான்.. சல்லி சல்லியாக உடைந்த சைக்கோ இயக்குனரின் மனக்கோட்டை

சந்தோஷ் பிரதாப்: ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் சந்தோஷ் பிரதாப். இவருக்கு வரிசையாக நிறைய படங்கள் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவு கதாபாத்திரம் அமையாமல் போனது. இதனால் மேலும் பிரபலமாக வேண்டும் என விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3யிலும் கலந்து கொண்டார்.

அப்படியும் இயக்குனர்களின் பட வாய்ப்பு சந்தோஷ் பிரதாப்பிற்கு கிடைக்காததால் இப்போது ஓடிடி-யில் வெளியாகும் படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அருள் நிதியுடன் இணைந்து நடித்த கழுவேத்தி மூர்க்கன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உடன் இணைந்து நடித்த மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படமும் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

விதார்த்: சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த விதார்த், ‘மைனா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் தொடர்ச்சியாக ஒரு சில பட வாய்ப்புகளை பெற்றார். ஆனால் இப்போது வெள்ளித்திரையில் சுத்தமாகவே வாய்ப்பு கிடைக்காமல் போனதால் வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார் .13 வருடங்களாக சினிமாவில் இருக்கும் விதார்த் கடைசியாக விக்ரம் பிரபு உடன் இணைந்து இறுப்பற்று என்ற படத்தில் நடித்திருந்தார். இவரை சமீப காலமாகவே வெளியாகும் ஓடிடி படங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

அஜ்மல்: அஞ்சாதே, கோ, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் தான் நடிகர் அஜ்மல். செம ஹண்ட்ஸும் லுக்கில் இருக்கும் அஜ்மல் தொடக்கத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடித்து அதன் பிறகு வில்லனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். ஆனால் வெள்ளித்திரையில் அவரை யாரும் மதிக்காததால் ஓடிடி ஹீரோவாக மாறினார். இவர் நடித்த கிரைம் திரில்லர் படமான ‘தீர்க்கதரிசி’ சமீபத்தில் வெளியானது. அதன் பிறகு இப்போது ஒரு வழியா தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

Also Read: லியோவை கைவிட்ட 5 முக்கிய பிரபலங்கள்.. வெற்றி விழாவில் கலந்து கொள்ளாமல் எஸ்கேப் ஆன சம்பவம்

நவ்தீப்: தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இளம் நடிகராக வளர்ந்து கொண்டு இருந்தவர்தான் நடிகர் நவ்தீப். இவர் கோலிவுட்டில் ஆர்யாவுடன் ‘அறிந்தும் அறியாமலும் ‘என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் இப்போது வெப் சீரிஸ் பக்கம் சென்றுவிட்டார். நவ்தீப் மற்றும் பிந்து மாதவி நடித்த ‘நியூசென்ஸ்’ என்ற தெலுங்கு வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Trending News