ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கல்லீரல் செயலிழக்கும் அளவுக்கு மூக்கு முட்ட குடித்த 6 நடிகர்கள்.. வெங்கட் பிரபு தம்பிக்கு இந்த நிலைமையா!

தங்களுடைய சந்தோஷம்தான் முக்கியம், அதனால் உடல் பாதித்தாலும் பரவாயில்லை. போதையில் மிதக்க வேண்டும் என மூக்கு முட்ட குடிப்பவர்கள் உண்டு. இதில் சில நடிகர்களும் குடித்து தங்களது கல்லீரலை சீரழித்திருக்கின்றனர். அதிலும் தற்போது  தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற வெங்கட் பிரபுவின் தம்பி ஓவர் ஆட்டம் போட்டு இருக்கிறார்.  

ரஜினி: சொல்லப்போனால் ரஜினியின் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலை பார்த்து தான் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பே கிடைத்தது. இருந்தாலும் ஓவராக சிகரெட்  மற்றும் தண்ணி அடித்ததால் அவருக்கு கல்லீரல் அலர்ஜி ஏற்பட்டது. பின் லதாவை திருமணம் செய்து கொண்ட ரஜினி படிப்படியாக  புகை பிடிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொண்டார்.  தற்போது அவரே தன்னுடைய ரசிகர்களுக்கு  நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றால் அதிக மாமிசம் மற்றும் சிகரெட், மது பழக்கம் இருந்தால் தயவு செய்து அதை குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை சொல்கிறார்.

விஜயகாந்த்: கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்தின் 6 மணி அவதாரத்தை பலமுறை நாம் கட்சி மேடைகளிலும் பார்த்ததுண்டு. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது விஜயகாந்த் சில நடிகர்களுடன் இணைந்து விடிய விடிய பார்ட்டி பண்ண கூடியவர். அப்போது செய்த  வினையால்தான் கேப்டனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதற்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று சிகிச்சை மேற்கொண்டு வருகிறார், இருப்பினும் அவருடைய உடல்நிலை மிகவும் மெலிந்து தற்போது வீல் சேரிலேயே முடங்கி போய்விட்டார்.

Also Read: வம்பை விலை கொடுத்து வாங்கும் கமல்.. உலக நாயகன் அனுபவத்திற்கு தகுதியானவர் ரஜினி தான்

கவுண்டமணி: காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த கவுண்டமணி ஓவர் மது பழக்கம் கொண்டவர். அதனாலேயே இவருடைய கல்லீரலும் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். தற்போது கவுண்டமணியை பார்க்கும் போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து போய் இருக்கிறார், இதற்கு வயது மூப்பு ஒரு காரணம் என்றாலும், சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது மூக்கு முட்ட  குடித்ததும் தான் அவருடைய தளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

பிரேம்ஜி:  இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும்  வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி காமெடி நடிகராக ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில், ஆளே மெலிந்து வயதான தோற்றத்தில் இருக்கிறார். இதற்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் தான்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டம், கேரியர் முடிவு என ரஜினியை சுற்றி பின்னும் வளையம்.. ஆனா அவர் மனதில் வைத்திருக்கும் திட்டம்

ரோபோ சங்கர்: சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பல அவமானங்களை கடந்து சினிமா வாய்ப்பை பெற்றவர் ரோபோ சங்கர். இவர் சமீப காலமாக டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இவரும் விவேக், வடிவேலு போல ஆகுவார் என நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், ஆளே மெலிந்து அடையாளம் தெரியாமல் காணப்படுகிறார். இதற்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் தான். இதனால் அவர்களுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு அதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறாராம்.

பாலா: அஜித்தின் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர்தான் நடிகர் பாலா. அவர் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். பாலாவிற்கு அனுதினமும் மூக்கு முட்ட குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனால் அவருடைய கல்லீரல் முற்றிலுமாக செயலிழந்து அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்திருக்கிறார்.

Also Read: சேர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாத 5 டபுள் ஹீரோக்கள்.. கட்டப்பாவிற்கு ரஜினி மீது என்ன கோபம் என்றே தெரியல

 இவ்வாறு இந்த 6 பிரபலங்கள் தான் குடிப்பழக்கத்தால் தங்களது கல்லீரலை பாழாக்கி கொண்டவர்கள். இதில் சிலர் அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வந்தாலும் பலர் தொடர்ந்து  அதை செய்ததால் தங்களது உடம்பைக் கெடுத்துக் கொண்டனர்.

Trending News