வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாமியார் வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்திய 6 நடிகர்கள்.. பரமசிவனாய் பட்டைய கிளப்பிய சூப்பர் ஸ்டார், கமல்

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் 6 கதாநாயகன்கள் சாமியார் வேஷம் போட்டு நிஜமாகவே கடவுளை கண்முன் கொண்டு வந்து நிற்க வைத்திருப்பார்கள். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் சிவபெருமானாக தங்களுடைய படங்களில் தோன்றி மெய்சிலிர்க்க வைத்தனர்.

சிவாஜி கணேசன்: நடிப்புச் சக்கரவர்த்தியான சிவாஜி கணேசனின் நடிப்பை திரையில் பார்க்கும்போது மெய்சிலிர்க்கக்கூடிய வகையில் இருக்கும். அந்த அளவிற்கு தெளிவான தமிழ் உச்சரிப்பு, உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு இப்போது இருக்கும் இளம் தலைமுறைகளுக்கெல்லாம் பாடமாக இருக்கிறது. அதிலும் புராணக் கதைகளில் சிவாஜி கணேசனின் நடிப்பை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. 1965 ஆம் ஆண்டு சிவபெருமானாக சிவாஜி நடித்த திருவிளையாடல் திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரட் படங்களின் லிஸ்டில் உள்ளது. இப்போதும் ஊர் திருவிழாக்களில் இந்த படத்தை திரையிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

சிவக்குமார்: 1967 ஆம் ஆண்டு ஏபி நாகராஜன் எழுதி இயக்கிய கந்தன் கருணை திரைப்படத்தில் சிவக்குமார் கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார். இவருடைய வட்டமான முக லட்சினத்திற்கு ஏற்ப முருகனின் கெட்ட அம்சமாக பொருந்திருக்கும். இவர் மட்டுமல்ல இந்த படத்தில் சிவாஜி வீரபாகு தேவராகவும், ஜெமினிகணேசன் சிவனாகவும், கேபி சுந்தராம்பாள் ஔவையாகவும், சாவித்திரி பார்வதியாகவும் நடித்து அசத்திருப்பார்கள்.

Also Read: கமலை உயிருக்குயிராய் காதலித்த நடிகை.. கெஞ்சி, கதறியும் ஏற்காத உலகநாயகன்

ரஜினி: பி. வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் உழைப்பாளி. இந்த படத்தில் சாமியார் வேஷம் போட்டு ரஜினிகாந்த் அடித்த லூட்டி இன்று மறக்க முடியாது. அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார்.

கமல்: நான்கு வயதில் இருந்து சினிமா பயணத்தை துவங்கிய உலக நாயகன் கமலஹாசன் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வெரைட்டி காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நடிப்பார். அதிலும் 2002 ஆம் ஆண்டு வெளியான பம்மல் கே சம்பந்தம் என்ற நகைச்சுவை படத்தில் பரமசிவன் வேஷத்தில் கலக்கி இருப்பார். இந்த கதாபாத்திரத்தை இவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என்கின்ற அளவுக்கு, அதில் கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார்.

Also Read: விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

அஜித்: 2007 ஆம் ஆண்டு அஜித், அசின் நடிப்பில் ஆழ்வார் திரைப்படம் வெளியானது. இதில் அஜித் தன்னை ஒருவித அவதாரங்களாகவே பார்ப்பார் உண்மையில் அவர் இராமன் மற்றும் கிருஷ்ணன் கெட்டப்பில் தோன்றுவார். அதிலும் கிளைமாக்ஸில் சிவன், நரசிம்மனாக மாறி எதிரிகளை வதம் செய்வது அல்டிமேட் ஆக இருக்கும்.

பிரகாஷ்ராஜ்: 2008 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் சந்தானம், கஞ்சா கருப்பு இவர்களுடன் பிரகாஷ்ராஜ் கடவுளாக நடித்திருப்பார். அதிலும் வெள்ளை நிற உடையில் மிக சாந்தமாக கடவுளாக தோன்றிய பிரகாஷ்ராஜ், நிஜமாகவே பார்ப்போருக்கு கடவுள் கண்ணும் வந்தால் எப்படி இருக்கும் என யோசிக்க வைத்தார்.

Also Read: முடங்கி கிடந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்.. நன்றி மறவாமல் அதிரடியாக உருவாகும் தலைவர்-173

இவ்வாறு இந்த 6 பிரபலங்கள் தான் சாமியார் கெட்டப்பில் கச்சிதமாக பொருந்தி நடித்த அசத்திருப்பார்கள். அதிலும் பரமசிவனாக சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் இருவரும் பட்டையை கிளப்பினர்.

Trending News