வயது மூப்பு காரணமாக இறந்ததை கூட ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் சில நடிகர்கள் எதிர்பாராத விதமாக திடீரென இறந்ததை ஜீரணிக்க முடியாமல் ஒட்டுமொத்த திரை துறையினரையும், ரசிகர்களையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி இந்த உலகத்தை விட்டு பிரிந்த ஆறு நடிகர்கள்.
விவேக்: சின்ன கலைவாணர் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் விவேக் ஹார்ட் அட்டாக் காரணமாக திடீரென இவ்வுலகை விட்டு பிரிந்தார். விவேக்கிற்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை. அவரது மகன் 2015 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார். விவேக் நடித்த கடைசி படம் யாதும் ஊரே யாவரும் கேளிர்.
மாரிமுத்து: எதிர்நீச்சல் நாடகத்தில் குணசேகரன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென நெஞ்சு வலி காரணமாக மரணமடைந்தார். இவர் இருக்கும்போது எதிர்நீச்சல் சீரியல் தான் நம்பர் ஒன். இவர் நடித்த கடைசி படம் உலகம்மை. மாரிமுத்து மற்றும் விவேக் இருவரும் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக இருந்தார்கள்
கிரேசி மோகன்: கமலின் நெருங்கிய நண்பரான இவர் பல படங்களுக்கு நகைச்சுவை வசனங்களை எழுதி படத்தை ஹிட் ஆக்கியவர். தமிழில் இவர் நடித்த கடைசி படம் கல்யாண சமையல் சாதம். இவரும் நெஞ்சு வலி காரணமாக மரணித்தார்.
கேப்டன் விஜயகாந்த்: கிட்டதட்ட இரண்டு வருடங்களாக உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார் விஜயகாந்த். எப்படியாவது தன்னுடைய வாரிசுகளை வளர்த்து விட வேண்டுமென எண்ணிய அவர் மகனுக்காக சகாப்தம் படத்தில் நடித்தார். இதுதான் அவருக்கு கடைசி படமாகவும் அமைந்தது.
ரகுவரன்: ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கிய ரகுவரன் குடிக்கு அடிமையாகி உடம்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அடடா என்ன அழகு.
முரளி: காதல் ஹீரோவாக எண்பதுகளில் கலக்கிய இவர் நடித்த கடைசி படம் பானா காத்தாடி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். முரளியின் மகன்கள் அதர்வா மற்றும் ஆகாஷ் இருவரும் நடிக்க வந்துவிட்டனர். மகனுக்காக பானா காத்தாடி படத்தில் கௌரவ இடத்தில் நடித்தார் முரளி.