சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

60 வயது ஆனாலும் பரவாயில்ல என மீனா ஜோடி போட்ட 6 நடிகர்கள்.. 30 வயது வித்தியாசம் எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி சுமார் 40 வருடங்களாக திரையுலகில் பிரவேசம் செய்து கொண்டிருக்கும் மீனாவிற்கு அண்மையில் ‘மீனா 40’ என்ற விழா எடுத்து கொண்டாடினார்கள். ஒரு நடிகை 40 வருடங்களாக சினிமாவில் இருப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. இவர் ஆரம்ப காலகட்டத்தில் 60 வயதானாலும் பரவாயில்லை என 6 நடிகர்களுடன் வயது வித்தியாசம் பார்க்காமல் ஜோடி போட்டு ஹிட் கொடுத்திருக்கிறார்.

மோகன்லால்: மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான த்ரிஷ்யம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் மோகன்லால் மற்றும் மீனா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்கள். இதில் ஜார்ஜ் குட்டியாக மோகன்லாலும் ராணியாக மீனாவும் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். இதில் நிஜமாகவே ஒரு கணவன் மனைவிக்குள் எந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகும் என்பதை உண்மையாகவே திரையில் காண்பித்திருப்பார்கள். ஆனால் மோகன்லாலுக்கு வயது 62 மீனாவிற்கு வயது வெறும் 46 தான். இந்த வயது வித்தியாசம் எல்லாம் திரையில் தெரியாது. அந்த அளவிற்கு மீனா மோகன்லால் உடன் இணைந்து சிறப்பாக நடித்திருப்பார்.

சரத்குமார்: 90களில் முன்னணி நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த சரத்குமார் இப்போது டாப் நடிகர்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இவர் சுந்தர் சி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான ரிஷி என்ற படத்தில் கதாநாயகனாகவும் இவருக்கு ஜோடியாக மீனா கதாநாயகி போல் நடித்திருப்பார் இந்த படத்தில் நடிக்கும்போது மீனாவை விட சரத்குமார் 22 வயது மூத்தவர் ஆனால் அது எல்லாம் பொருட்படுத்தாத மீனா நடிப்பின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் சரத்குமார் உடன் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். தற்போது 46 வயதான மீனா 68 வயதுடைய சரத்குமார் உடனும் ஜோடி போட்டிருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Also Read: ரஜினியை மீறி நினைத்ததை சாதித்த நெல்சன்.. ஜெயிலரில் நண்பனுக்காக செய்த சம்பவம்

கமல்: 46 வயதான மீனா, 68 வயது உடைய கமலுடன் அவ்வை சண்முகி என்ற படத்தில் டூயட் பாடி இருக்கிறார். இதில் ஜானகி மாமி கெட்டபில் மீனா கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார். அதிலும் கமலுடன் சண்டை போடும் போதும் சரி, ரொமான்ஸ் பண்ணும் போதும் சரி இவர்களுக்கு இடையே இருக்கும் 22 வயசு வித்தியாசம் சுத்தமாகவே தெரியாது. அதுதான் அந்த படம் சூப்பர் ஹிட் ஆவதற்கு காரணமாகவும் அமைந்தது.

சத்யராஜ்: 1994 ஆம் ஆண்டு சத்யராஜ் மீனா நடிப்பில் வெளியாகி திரைப்படம் தான் தாய்மாமன். இதில் மாடர்ன் லுக்கில் இருக்கும் மீனாவிற்கும் கிராமத்துக் கதாபாத்திரத்தில் அவருடைய முறை மாமனாக நடித்திருக்கும் சத்யராஜுக்கும் இடையே ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் வரும். இருப்பினும் இருவருக்கும் இடையே உள்ள காதலை மிக அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்கள். தற்போது 46 வயதான மீனா, 68 வயதுடைய சத்யராஜ் உடன் டூயட் பாடியது பலரையும் வாயடைக்க வைத்தது. அது மட்டுமல்ல தாய்மாமன் படத்தின் வெற்றிக்கு பிறகு மறுபடியும் இந்த ஜோடி மாமன் மகள் என்ற படத்தில் இணைந்து அந்தப் படத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கியது.

Also Read: சிம்புவால் கமலுக்கு ஏற்பட்ட தலைவலி.. தேரை இழுத்து தெருவில் விட்ட கதையா ஆயிடுச்சு!

ரஜினி: அன்புள்ள ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அதன் பிறகு கதாநாயகியாக மறுபடியும் ரஜினியுடன் முத்து படத்தில் இணைந்தது திரைபிரபலங்களை வியப்பில ஆழ்த்தியது. ஆனால் மீனா அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதால், தற்போது 46 வயதான மீனா 72 வயதுடைய ரஜினியுடனான முத்த காட்சிகளில் முத்து படத்தில் அசால்டாக நடித்துக் கொடுத்தார். முத்து படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து எஜமான், வீரா போன்ற படங்களிலும் மீனா ரஜினியுடன் ஜோடி போட்டு வெற்றி கண்டார்.

ராஜ்கிரண்: மீனா ராஜ்கிரனுக்கு மனைவியாக ‘என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்திருப்பார். இதில் முரட்டுத்தனமாக இருக்கும் ராஜ்கிரனுக்கு எலி குட்டி போல் மீனாவை கதாநாயகியாக கொண்டிருக்கிறார்களே என பார்ப்போருக்கு தோன்றினாலும், இதில் மீனாவின் நடிப்பால் 30 வயது வித்தியாசம் எல்லாம் சுத்தமாகவே தெரியவில்லை. பக்கா குடும்ப செண்டிமெண்ட் படம் ஓட இந்த படத்தில் மீனா அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே தோன்றி தன்னுடைய இயல்பான நடிப்பினை வெளிக்காட்டி அசத்தியிருப்பார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர்கள் இருவரும் மறுபடியும் பாசமுள்ள பாண்டியரே என்ற படத்தில் இணைந்தனர். இருந்தாலும் 46 வயதான மீனா, 74 வயது உடைய ராஜ்கிரனுக்கு ஜோடிபோட்டது கொஞ்சம் ஓவர் தான்.

Also Read: ரஜினி வில்லனை நோக்கி படையெடுக்கும் இயக்குனர்கள்.. முதல் ஆளாக முந்தி கொண்ட கே எஸ் ரவிக்குமார்

இவ்வாறு தமிழ் சினிமாவில் 90களில் பேவரைட் நடிகை ஆக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த மீனா, நடிப்பிற்காக வயது வித்தியாசம் இல்லாமல் 60 வயதானாலும் பரவாயில்லை என அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துதான்அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். ஆனால் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்தது தான் ரசிகர்களால் தாங்க முடியவில்லை.

Trending News