வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நடிப்புன்னா என்னானு தெரியாமல் ஊரை ஏமாற்றும் 6 நடிகர்கள்.. மொக்கை காமெடி அடிக்கும் மிர்ச்சி சிவா

6 Actors: கதைக்கு தகுந்த கதாபாத்திரம் ஏற்று நடித்து, தன் திறமைக்கேற்றவாறு நடிப்பை கொண்டு செல்லும் நடிகர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அவ்வாறு இல்லாமல் கிடைத்த வாய்ப்பை கொண்டு நானும் நடிச்சேன்னு பந்தா காட்டி திரியும் 6 நடிகர்களை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

உதயநிதி ஸ்டாலின்: படங்களின் தயாரிப்பை மேற்கொண்ட இவர் நடிப்பின் மீது ஆசை கொண்டு நடித்த படங்களில் நண்பேன்டா, மனிதன், நிமிர், சைக்கோ, மாமன்னன் போன்றவை பெரிதும் பேசப்பட்டது. இருப்பினும் தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முகபாவனை கொடுக்கத் தெரியாதவர் என்றும் மக்களின் விமர்சனத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திரிஷாவின் காதலன் தயாரிப்பில் சமுத்திரகனியின் மாஸ் கூட்டணி.. இயக்குனராக நிரூபிக்காமல் விடமாட்டேன்!

சந்தானம்: தனக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டி இவர் மேற்கொண்ட படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின் புது முயற்சியாய் கதாநாயகனாக இடம்பெற்று, போதிய வரவேற்பு இல்லாமல் வாய்ப்பு இழந்து காணப்பட்டு வருகிறார் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ்: பொதுவாய் இவரின் திறமையாக பார்க்கப்படுவது நடனம். அதையும் தாண்டி இவர் மேற்கொள்ளும் ஹீரோ கதாபாத்திரம் பெரிதாய் பேசும் அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில படங்களில் அவ்வப்போது பேய்களின் ஆசையை நிறைவேற்றும் ஒரே கதையை மேற்கொண்டு நடித்திருப்பார் ராகவா லாரன்ஸ்.

Also Read: கொலை நடுங்க வைக்கும் சந்திரமுகி 2.. முதல் முறையாக வெளிவந்த விமர்சனம்

மிர்ச்சி சிவா: நடிப்பை பற்றி சற்றும் தெரியாத இவர் போடும் மொக்கை காமெடிகளை கொண்டு சினிமாவில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். இருப்பினும் அரைச்ச மாவையே அரைப்பது போன்று இவரின் காமெடிகள் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் காமெடி என்ற பெயரில் படம் முழுக்க கொண்டு செல்வது வெறுப்பை ஏற்படுத்துகிறது.

பிரேம்ஜி: வெங்கட் பிரபு இயக்கத்தில் இடம்பெறும் படங்களில் கதை இருக்கிறதோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக பிரேம்ஜி இடம் பெற்று விடுவார். நானும் நடிக்கிறேன்னு ஊருக்கு பந்தா காட்டி அவ்வப்போது சினிமாவில் தலை காட்டி வரும் நடிகர்களில் இவரும் ஒருவர். மேலும் இவரின் காமெடியும் அந்த அளவிற்கு ரீச் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஏறினா நுங்கு விழுந்தா சங்கு.. வாய்ப்புக்காக டாப் ஹீரோவுக்கு ரூம் போட்டு ஆசை காட்டும் நடிகை

பிரசாந்த்: வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று அதன் பின் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இருப்பினும் இவர் நடிப்பில் எந்த ஒரு புது முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News