திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காமெடி பண்றேன்னு கடுப்பேத்திய 6 நடிகர்கள்.. விஜய்யுடன் படம் முழுக்க டிராவல் செஞ்சும் பிரயோஜனம் இல்லாத சதீஷ்

6 Comedians: எந்த சப்ஜெக்ட் படமாக இருந்தாலும், கதைக்கு இடையே எழும் நகைச்சுவைக்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு உண்டு. மேலும் படத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு காமெடியன்களை பயன்படுத்திக் கொள்வார்கள். அவ்வாறு படத்தில் சிரிப்பு நடிகராய் வந்து காமெடி பண்றேன் என்ற பெயரில் கடுப்பேத்திய 6 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

சதீஷ்: சினிமாவில் நகைச்சுவை நடிகராய் வாய்ப்பு பெற்றவர் சதீஷ். இவர் எண்ணற்ற படங்களில் நடித்திருந்தாலும் இவரின் காமெடிகள் மக்களிடையே பெருதளவு ஈர்க்கப்படவில்லை. அவ்வாறு பைரவா படத்தில் துணை நடிகரைப் போல விஜய்யுடன் படமுழுக்க டிராவல் செய்தும் இவரின் நகைச்சுவை பெரிதளவு பேசப்படவில்லை என்பது தான் வருத்தமான ஒன்று.

Also Read: வேற லெவலில் பட்டையை கிளப்பும் யோகி பாபு.. ஜவான் படத்தில் அதிகப்படியாக வாங்கிய சம்பளம்

சிங்கம் புலி: நடிகரும், இயக்குனருமான சிங்கம் புலி நகைச்சுவை நடிகராய் மேற்கொண்ட படங்கள் ஏராளம். பல படங்களில் இவரின் நகைச்சுவை பெரிதளவு மக்கள் இடையே பேசப்படவில்லை என்பது தான் உண்மை. தன் தோற்றத்தாலும், நடிப்பாலும் காமெடியனாய் வலம் வந்த இவர் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மேற்கொண்ட நடிப்பு, நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

கருணாஸ்: இவர் அஜித்துடன் அட்டகாசம் படத்தில் மேற்கொண்ட நகைச்சுவை மக்களை ஈர்த்த ஒன்றாகும். அதன் பின், இவர் மேற்கொண்ட எந்த படமும் மக்களிடையே பெரிதாக பேசப்படவில்லை. அதை அறிந்து தற்போது நமக்கு நகைச்சுவை வராது என முடிவெடுத்து சினிமா பக்கம் தலை காட்டாமல் தெறித்து ஓடிவிட்டார் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: எனக்கும் அந்த வில்லனுக்கும் போட்டியா?. வெற்றி கண்ட பின் நாசுக்காய் மேடையில் சோப்பு போட்டு வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

இமான் அண்ணாச்சி: சுட்டிக் குழந்தை நிகழ்ச்சியின் மூலம் பரவலாய் பேசப்பட்டவர். இவரின் பேச்சு தோரணை சிறப்பாக அமைந்திருந்தாலும் நகைச்சுவை எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது ஒரு சில கதாபாத்திரங்களில் தலைகாட்டிய இவர் மீண்டும் நிகழ்ச்சியையே மேற்கொள்ள தொடங்கி விட்டார்.

யோகி பாபு: சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த இவர் கிடைத்த வாய்ப்பை ஏற்கும் விதமாய் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் நகைச்சுவையை மேற்கொள்ளும் இவர் மக்களின் வரவேற்பை பெற்று நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார். அதிலும் கோலமாவு கோகிலா படத்தில் இவரது நகைச்சுவை பெரிதாக பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து மண்டேலா படத்தில் வேறு பரிமாணம் ஏற்று நடித்து தற்பொழுது முன்னணி நடிகராய் மாறிவிட்டார்.

Also Read: நடிப்பையே உயிர் மூச்சாக கொண்ட 6 குணசேத்திர நடிகர்கள்.. 800 படம் நடித்தும் அங்கீகாரம் கிடைக்காத கொடுமை

சூரி: தன் திறமைக்கான வாய்ப்பு தேடி அலைந்த இவர் வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா காமெடி மூலம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டார். அதைத்தொடர்ந்து பல பிரபலங்களோடு இணைந்து காமெடியில் அசத்தி வந்தார். தற்பொழுது புது பரிமாணமாக கதாநாயகன் அவதாரம் எடுத்து விடுதலை படத்தில் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இதில் யோகி பாபுவும், சூரியும் தனக்கான பாதையை தேடி முன்னணி நடிகராக மாறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News