வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

நடிப்பில் பட்டையை கிளப்பியும் பிரயோஜனம் இல்லாமல் போன 6 நடிகர்கள்.. பொழைக்கத் தெரியாமல் நிற்கும் விக்ராந்த்

Not Recognized Actors: எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி தோல்வி என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதுவும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. இந்த நிலைமையிலும் சில நடிகர்கள் எப்படியாவது நமக்கான அங்கீகாரத்தை பெற்று விடமாட்டோமா என்ற ஏக்கத்தில் பல படங்களில் நடித்து அவர்களுடைய திறமையை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அதை எல்லாம் அவர்களுக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. அப்படிப்பட்ட நடிகர்களைப் பற்றி பார்க்கலாம்.

வைபவ்: தமிழில் சரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களுக்கு பரிச்சயமான நடிகராக வந்தார். இதனைத் தொடர்ந்து கோவா, மங்காத்தா, பிரியாணி போன்ற பல படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கப்பல், வணக்கம் நான் பேய் பேசுகிறேன், மேயாத மான் போன்ற படங்களில் ஹீரோவாக தனியாக நின்று நடித்தார். இருந்தும் இவரால் சினிமாவில் பெரிய அங்கீகாரத்தை பெற முடியவில்லை.

Also read: சப்போர்ட் கேரக்டரில் நடித்து கேரியரை தொலைத்த 7 நடிகர்கள்.. திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் கலையரசன்

கலையரசன்: இவர் அட்டகத்தி, முகமூடி போன்ற படங்களின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் மெட்ராஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து துணை நடிகருக்கான விருதையும் பெற்றார். அதன்பின் பல படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து வந்த இவர் அதே கண்கள் என்ற படத்தில் ஹீரோவாகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். ஆனாலும் இவருக்கு சினிமாவில் சொல்லும் படியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

விக்ராந்த்: இவர் கற்க கசடற என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அதன் பின் படம் வாய்ப்பு எதுவும் சரியாக அமையாமல் முக்கியமான கதாபாத்திரத்தில் சைடு கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நன்றாக நடித்துமே இவர் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்.

Also read: எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?

கதிர்: இவர் மதயானைக் கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் இவருக்கு எந்த பட வாய்ப்புகளும் வராததால் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது லியோ படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையாததால் வருகிற ஒரு சில வாய்ப்புகள் வைத்து சினிமாவில் தலையை காட்டிக் கொண்டிருக்கிறார்.

விதார்த்: கிட்டத்தட்ட சினிமாவிற்கு நுழைந்து பத்து வருடங்கள் போராடிய பிறகே மைனா படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் காத்திருந்ததற்கு பிரயோஜனம் என்பது போல் இப்படம் இவருக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இதை வைத்து ஒரு சில படங்கள் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் ஹீரோ என்கிற அந்தஸ்தை விட்டு எந்த கதாபாத்திரம் வந்தாலும் அதை சிறப்பாக நடித்தும் பொழைக்கத் தெரியாமல் நிற்கிறார்.

ஆதி: இவர் தமிழில் ஹீரோவாக அறிமுகமானது ஒரு வித்தியாசமான கதைகளத்துடன் மிருகம் என்ற படத்தில் மூலம் தான். இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான் போன்ற பல படங்களில் ஹீரோவாக ஜொலித்து வந்தார். அதன் பின் சொல்லும்படியான வாய்ப்புகள் வராததால் இவர் காதலித்து வந்த நடிகை நிக்கி கல்யாணியை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி விட்டார்.

Also read: டாப் ஹீரோகளுக்கு கடிவளம் போட்ட FEFSI.. அதிரடியாக போட்ட 5 கண்டிஷனால் திக்குமுக்காடும் திரையுலகம்

- Advertisement -spot_img

Trending News