வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நம்பாமல் கைவிடப்பட்ட 6 நடிகர்கள்.. அட்லீஸ்ட் டபுள் ஹீரோ சப்ஜெக்டாவது வாய்ப்பு கொடுங்கள்

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் சில நடிகர்கள் சினிமாவில் வளர முடியாமல் போகிறது. இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் பறிபோகிறது. இதனால் தற்போது அந்த நடிகர்கள் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வாய்ப்பு இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கின்றனர்.

அட்டகத்தி தினேஷ் : ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த தினேஷ் அட்டக்கத்தி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில் பா ரஞ்சித் இன் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கத்தில் ஜெ பேபி என்ற படத்தில் நடித்துள்ளார். தினேஷ் திறமையான நடிகராக இருந்தாலும் தற்போது வரை அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

விமல் : கில்லி, குருவி, கிரீடம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் விமல். பசங்க படம் இவரை ஒரு கதாநாயகனாக அறிமுகம் செய்தது. மேலும் களவாணி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தொடர்ந்து வாகை சூடவா, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் உள்ளார்.

ஸ்ரீகாந்த் : தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில் என பல படங்களில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் தனக்கான இடத்தை ஸ்ரீகாந்த் ஆல் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் தற்போது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார்.

கலையரசன் : பெரும்பாலும் மிஸ்கின் மற்றும் பா ரஞ்சித் இயக்கும் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் கலையரசன். மெட்ராஸ், டார்லிங் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜா மந்திரி, டார்லிங் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது டைட்டானிக் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் தனது திறமைக்கேற்ற படத்திற்காக கலையரசன் காத்துக்கொண்டிருக்கிறார்.

விஷ்ணு விஷால் : வித்யாசமான கதைக் களத்தின் மூலம் மக்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு, முண்டாசுப்பட்டி, குள்ளநரி கூட்டம் ஆகிய படங்களில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப்ஐஆர் படம் வெளியானது. ஆனால் விஷ்ணு விஷாலுக்குகான அங்கீகாரம் தற்போது வரை கிடைக்கவில்லை.

ஆதி : ஈரம் படத்தில் ஆதியின் நடிப்பு பலராலும் கவரப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆடுபுலி, அரவான், அய்யனார், யாகவராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆதியிடம் திறமை இருந்தும் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

Trending News