Tallented Actor No Chance to Act: சினிமாவிற்குள் நுழைந்த எத்தனையோ பேர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக் கொண்டு வருகிறார்கள். இதையும் மீறி சில நடிகர்களின் திறமையால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஒரு சில படங்களில் நடித்த பிறகு தொடர்ந்து நடிக்க முடியாமல் காணாமல் போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
பிரசன்னா: இவர் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அந்த வகையில் அழகிய தீயே, கண்ட நாள் முதல், சாதுமிரண்டால், நாணயம் போன்ற படங்களில் நடித்து வந்த நிலையில் திடீரென்று இவருக்கான அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. அதனால் ஹீரோவாக நடிக்காமல் வில்லன், குணச்சித்திர கேரக்டர் போன்ற இது மாதிரியான வாய்ப்புகளில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவரிடம் திறமை இருந்தும் இவரால் சரியான அங்கீகாரத்தை பெற முடியவில்லை.
கதிர்: மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அடுத்து பரியேறும் பெருமாள், கிருமி போன்ற படங்களில் நடித்து வந்த இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தற்போது வரை போராடி வருகிறார். ஆனால் இவர் நடித்த படங்களில் இவருடைய நடிப்பு சூப்பர் என்ற சொல்லும் அளவிற்கு பிரமாதமாக நடித்திருப்பார். அப்படிப்பட்ட இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இளங்கோ குமரவேல்: இவர் நடித்த அபியும் நானும், மதராசபட்டினம், நட்பே துணை போன்ற அனைத்து படங்களிலும் இவருடைய கேரக்டர் சப்போர்ட்டிங் ரோலில் தான் அமைந்திருக்கிறது. ஆனால் இவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இவருடைய நடிப்பில் குறை சொல்ல முடியாத அளவிற்கு தூக்கி நிறுத்தி இருப்பார். அப்படிப்பட்ட இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Also read: ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறிய 5 தம்பதிகள்.. கேரியரை சோழி முடித்த பாபி சிம்ஹா
பரணி: இவர் கல்லூரி, நாடோடிகள், தூங்காநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். சப்போர்ட்டிங் கேரக்டரிலும், காமெடியனாகவும் இவருடைய கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பதில் கெட்டிக்காரராக வந்தார். ஆனால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ்க்கு சென்றார். அங்கேயும் இவரால் தாக்கு பிடிக்க முடியாததால் பாதிலேயே வெளிவந்து விட்டார். அதன் பின் என்ன ஆனார் என்று வந்த சுவடு தெரியாமல் பரிதாபமாக காணாமல் போய்விட்டார்.
பாபி சிம்ஹா: ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டிலுமே இவருடைய சிறப்பான நடிப்பை கொடுத்து பட்டையை கிளப்பி பெயர் வாங்கி வந்தார். முக்கியமாக இவர் நடித்த ஜிகர்தண்டா படத்தில் இவருடைய நடிப்பு தான் மிகப்பெரிய ஹைலட்டாக அமைந்தது. அப்படிப்பட்ட இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தொடர்ந்து நடிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டு வருகிறார்.
எம்எஸ் பாஸ்கர்: இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இப்பொழுது வரை துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரத்தை சரிவர செய்து இவருடைய கேரக்டருக்கு பாராட்டுக்களை வாங்கக்கூடிய திறமையானவர். அப்படிப்பட்ட இவருக்கு இன்னும் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
Also read: உடல் எடை குறைக்க முடியாமல் திணறும் 5 ஹீரோக்கள்.. பல வருடங்கள் முயன்றும் தோற்றுப்போன அஜித்