வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விவாகரத்துக்கு பின் மறுமணம் பற்றி யோசிக்காத 6 நடிகர்கள்.. டேட்டிங் உறவில் சித்தார்த் செய்யும் அட்டூழியம்

சினிமாவில் இருக்கும் சில நடிகர்கள் அவர்களுடன் நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். அதிலும் சில நடிகர்கள் அவர்கள் பெற்றோர்கள் பார்த்து வரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில நடிகர்கள் திருமணத்திற்கு பின் வாழ்ந்த கொஞ்ச காலத்திலேயே அவர்களை விட்டு பிரிந்து விட்டார்கள். ஆனாலும் அவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். அந்த நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

பார்த்திபன்: இவர் புதிய பாதை திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் பார்த்திபன் 90களில் முன்னணி நடிகையாக இருந்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 11 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகளும் ஒரு மகனும் பிறந்தனர். அதன் பின் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து விட்டார்கள். பிரிந்த கொஞ்ச நாளிலேயே சீதா, சீரியல் நடிகரான சதீஷை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் மட்டும் இப்ப வரை வேற திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

Also read: பொண்டாட்டி தொல்லை தாங்காம கழட்டி விட்ட 5 நடிகர்கள்.. இளம் நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

பிரசாந்த்: இவர் 90களில் ஹீரோவாக நடித்து சாக்லேட் பாயாக பல பேர் மனதை கொள்ளையடித்தவர். அதிலும் விஜய் மற்றும் அஜித்தை விட மிகவும் பிரபலமாக வந்தார். அந்த நேரத்தில் இவர் 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால் இவருடைய மனைவி விவாகரத்து கேட்டார். அதன் பின் இவர்கள் இருவருக்கும் 2009 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து வழங்கப்பட்டு விட்டது. மேலும் பிரசாந்த் இதுவரை மறு திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

சித்தார்த்: இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்பொழுதிலிருந்தே இவர்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டதால் ஒரு வருடம் முடிந்த உடன் பிரிந்து வாழ்ந்தார்கள். பின்பு 2007 இல் விவாகரத்து செய்தனர். ஆனாலும் இதெல்லாம் பற்றி கவலை இல்லாமல் பல நடிகைகளுடன் டேட்டிங் உறவில் இருப்பதாக சர்ச்சையில் இவர் பெயர் அடிபட்டது. சமீபத்தில் அதிதி ராவ் உடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. இவருக்கு இதன் மேல அதிக நாட்டம் இருப்பதினால் என்னமோ மறு திருமணத்தின் மேல் விருப்பமெல்லாம் போய்விட்டது.

Also read: நார வாயால் சிக்கி சின்னா பின்னமான சித்தார்த்.. கடைசியில் கமல் காட்டிய கருணை

பிரபுதேவா: இவர் 1995ஆம் ஆண்டு லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. பிறகு இவர்கள் இருவரும் புரிதலின் அடிப்படையில் விவாகரத்து செய்தார்கள். அதற்காக இவரது மனைவிக்கு ஜீவனாம்சமாக 10 லட்சம் ரூபாயும், அத்துடன் இரண்டு கார்கள் மற்றும் இவருடைய சொத்தையும் இவருடைய குழந்தையின் பெயருக்கு மாற்றி உள்ளார். அந்த இரண்டு குழந்தைகளும் மனைவியின் கண்காணிப்பில் தான் இருக்கிறார்கள். அந்த குழந்தைகளின் படிப்பு செலவுகள் மற்றும் திருமண செலவுகளை பிரபுதேவாவே ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக இவரும் நயன்தாராவும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தார்கள். அதுவும் இவருக்கு செட்டாகாமல் தற்போது தனிமையில் வாடிக் கொண்டுதான் இருக்கிறார்.

தனுஷ்: இவர் 2004 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இவர்கள் இருவருக்கும் யாத்ரா ராஜா மற்றும் லிங்கராஜா என்று இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் 18 வருடமாக கல்யாண வாழ்க்கையில் இருந்த பின்பு இவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சில மனக்கசப்பால் தற்போது பிரிந்து வருகிறார்கள். ஆனாலும் தன் மனைவியை மறக்க முடியாமல் மறு திருமணத்தை பற்றி யோசிக்காமல் இருக்கிறார்.

ராமராஜன்: இவள் தன்னுடன் நடித்த நடிகையான நளினியை 1987 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அதன் பின் இவர்கள் இருவருக்கும் மனதால் ஒற்றுமை இல்லாததால் இவர்கள் இருவருமே புரிதலின் அடிப்படையில் பிரிந்து வாழ்வதாக முடிவு எடுத்தார்கள். அதன் பின் இவர்கள் இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.

Also read: தனுஷ், விஜய் பட்டும் திருந்தாத செயல்.. பணத்துக்காக சூர்யா எடுத்திருக்கும் அதிரடி முடிவு

Trending News