சினிமாவே வாழ்க்கையாக கருதி, தன்னிடம் இருக்கும் திறமைகள் மூலம் சாதித்தவர்கள் ஏராளம். அவ்வாறு இருக்க தனக்கு கிடைக்கும் நேரத்திற்கு அவ்வப்பொழுது ஹாபியாய் வந்து நடித்து செல்லும் நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தன் தேவைக்காக பட வாய்ப்பு ஏற்பவர்களும், மேலும் தனக்கு பிடித்த கதாபாத்திரம் என்றால் அதற்கு ஆர்வம் காட்டுவதும் இது போன்ற பல விஷயங்களால் சினிமாவை ஹாபியாய் நினைத்து நடித்து வருகிறார்கள். அவ்வாறு கருதி, நடிப்பினை விட்டுப் போன 6 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.
Also Read: இயக்குனர் பாண்டிராஜ் முத்திரை பதித்த 5 படங்கள்.. அதிக வசூல் கண்ட சூர்யா படம்
ஜீவன்: இவர் யுனிவர்சிட்டி என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக, எதார்த்தமான நடிப்பின் மூலம் அறிமுகமானவர். அதன்பின் காக்க காக்க என்னும் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக இடம் பெற்றிருப்பார். 2009ல் நான் அவன் இல்லை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். அதன்பின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்பொழுது படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
அப்பாஸ்: இவர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, படையப்பா, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருப்பார். ஒரு காலகட்டத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த இவர் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
Also Read: மகாலட்சுமியுடன் விவாகரத்தா விளக்கி கூறிய ரவீந்தர்.. 90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது
வினித்: பன்முக திறமை கொண்ட இவர் ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக பலம் வந்தவர். அவ்வாறு சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் ஜென்ம காதலராக வினித் நடித்திருப்பார். சினிமாவில் கிடைக்கும் ஒரு சில வாய்ப்பை ஏற்க விருப்பம் இல்லாது தன்னை நடனத்திற்கே அர்ப்பணித்து விட்டார் எனவும் கூறலாம்.
ஹம்சவர்தன்: மானசீக காதல், வடுகபட்டி மாப்பிள்ளை, ஜூனியர் சீனியர், மந்திரம் போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாக இடம் பெற்றவர் ஹம்சவர்தன். இவரின் படங்கள் வணிக ரீதியாக தோல்வியை தழுவியதால் அடுத்த அடுத்த படங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்.
Also Read: எல்லாத்துக்கும் கட்டையை போடும் விஜய்.. லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்
நவ்தீப்: 2005ல் வெளியான அறிந்தும் அறியாமல் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின் சில படங்களில் நெகட்டிவ் ரோல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் நடிகராக வாய்ப்பை கிடைக்காமல் சப்போட்டிங் ஆர்டிஸ்ட் ஆக இடம்பெற்ற இவர் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் சினிமாவில் ஆர்வம் இழந்து காணப்படுகிறார்.
ரவி கிருஷ்ணா: 2004ல் வெளிவந்த 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் கதிர் என்னும் கதாபாத்திரத்தில் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டவர் ரவி கிருஷ்ணா. அதன் பின் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் போதிய வரவேற்பு கிடைக்காமல் சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்படுகிறார். மேலும் தற்பொழுது 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2 வில் இவரே இடம்பெறுவார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.