திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நிஜ வாழ்க்கையில் உயிருக்கு உயிராய் பழகிய 6 நடிகர்கள்.. எம்ஜிஆருக்கு வில்லனும் நண்பரும் அவர் ஒருத்தர் மட்டும்தான்

Actors Friendship: நடிகர்கள் பொருத்தவரை எத்தனை படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏகப்பட்டது வந்து போயிருக்கும். அதற்கு காரணம் நீ பெரியவன், நான் பெரியவன் என்ற வறட்டு கௌரவம் என்றே சொல்லலாம். ஆனால் அதையும் மீறி சில நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் உயிருக்கு உயிராக பழகி நண்பர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

விஷால்: இவருக்கு நம்பிக்கையான நண்பர் என்று சொல்லக்கூடியவர் ஆர்யா. இவர்களுடைய நட்பு மிக வலிமையாக நீடித்துக் கொண்டு வருகிறது. இவர்கள் அவன் இவன் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து இவர்களுடைய புரிதல் ஸ்ட்ராங் ஆகிவிட்டது. அதனாலயே இவர்கள் நடிக்கும் படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்து நடித்துக் கொடுத்துட்டு போவார்.

Also read: அரசியலில் இறங்கி விளையாட துடிக்கும் 5 ஹீரோக்கள்.. தேவ இல்லாத மொத்த வித்தையையும் கத்துள்ள விஷால்

சத்யராஜ்: லொள்ளுக்கும், வில்லத்தனத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் இரண்டையும் கைவந்த கலையாக நடித்துக் கொடுப்பவர் சத்யராஜ். இவரை முக்கால்வாசி சினிமாவில் கை கொடுத்து தூக்கி விட்டவர் மணிகண்டன் தான் என்றே சொல்லலாம். இவர்கள் காம்பினேஷன் இல்லாத படங்களை அப்போது கிடையாது. இவர்கள் இணைந்து விட்டாலே அந்த படம் வெற்றியாக மாறிவிடும். அதனாலே நிஜ வாழ்க்கையிலும் நட்பாக பழகி வந்தார்கள். அதே மாதிரி கவுண்டமணியும் சத்யராஜுக்கு நல்ல தோழனாக இருந்தார்.

கவுண்டமணி: எப்படி சிவனையும் சக்தியும் பிரிக்க முடியாதோ, அதேபோல் கவுண்டமணி செந்திலை பிரிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஒன்றாக நடித்து காட்டி இருக்கிறார்கள்.  இவர்கள் இருவரிடமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், ஒற்றுமையாக இருக்கக்கூடிய ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இவர்களிடம் உண்டு.

Also read: சென்சார் போர்ட் எதிர்ப்பையும் மீறி வெற்றி கண்ட சிவாஜிகணேசன்.. ஒரே படத்தில் மாபெரும் புகழ் பெற்ற 2 ஜாம்பவான்கள்

சிவாஜி கணேசன்: இவர் எந்த அளவுக்கு நடிப்பின் சக்கரவர்த்தி என்ற பெயரை வாங்கி இருக்கிறாரோ, அதேபோல் மற்றவர்களிடம் பழகக்கூடிய விதமும் இவரை போல் யாரும் கிடையாது. அதே மாதிரி நட்பு ரீதியாகவும் இவர் காலகட்டத்தில் உள்ள ஜெமினி கணேசன், வி கே ராமசாமி இவர்களிடம் தோள் கொடுக்கும் தோழமையாக பழகி வந்திருக்கிறார்.

ரஜினிகாந்த்: தற்போது முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருக்கக்கூடிய இவர் எப்பொழுதும் மேடையில் கமலை பற்றி பெருமையாக பேசாமல் இறங்குவதே கிடையாது. அந்த அளவிற்கு இவர்களுடைய நட்பு ரொம்பவே புனிதமானது. அத்துடன் ரஜினிக்கு வில்லனாக பெரும்பாலான படங்களில் நடித்த ஜெய்சங்கரும் இவருக்கு மிக நெருங்கிய நண்பராக நிஜ வாழ்க்கையில் இருந்து வந்திருக்கிறார்.

எம்ஜிஆர்: இவர் நடிக்கும் படங்கள் மற்றும் பாடல்கள் மூலமே, எப்படிப்பட்டவர் என்பது நன்றாக அனைவருக்கும் புரிந்திருக்கும். எந்த வித கெட்ட குணங்களும் இல்லாமல், பொறாமை போட்டி இல்லாமல் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் பெயர் வாங்கியவர். அத்துடன் இவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் சினிமாவில் இருந்தாலும், சில நடிகர்களை நண்பர்களாக நினைத்து தூக்கி கொண்டாடி இருக்கிறார். அதில் இவருக்கு எப்பொழுதுமே வில்லன் என்று சொல்லக்கூடியவர் நம்பியார். அப்படிப்பட்ட இவர் எம்ஜிஆரின் நிஜ வாழ்க்கையில் உண்மையான நண்பராக இருந்திருக்கிறார்.

Also read: எம்ஜிஆர் இடத்துக்கு ஆசைப்படும் விஜய்.. டெப்பாசிட் கூட கிடைக்காத படி அக்கப்போர் பண்ணும் அல்லக்கைகள்

Trending News