வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கஷ்டப்பட்டு முன்னேறி சம்பாதிக்கும் நேரத்தில் உயிரை விட்ட நடிகர்கள்.. கண்டுகொள்ளாத சங்கங்கள், சந்தானம், விஷால்

6 actors who lost their lives while working hard to make progress: தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக சிக்கி சின்னா பின்னமாகி லோல் படும் நடிகர்கள், வாய்ப்பு வந்து வெற்றிப் படிகளில் ஏற துவங்கும் நேரத்தில் காலன் வந்து தூக்கிக் கொண்டு போவது கொடூரத்திலும் கொடூரம்.

இவ்வாறு பல தோல்விகளுக்கு பின் வெற்றி பெற துடிக்கும் இந்த மாதிரியான 6 நடிகர்களை, நடிகர் சங்கமும், அவர்கள் உழைப்பை பக்க பலமாக வைத்து முன்னேறிய முன்னணி நடிகர்கள் சிலரும் இவர்களை கண்டு கொள்ளாதது வேதனையான ஒன்று.

மாரிமுத்து: எஸ் ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்து, பின் இயக்குனரான பின்பும் ஜொலிக்க முடியாமல் நடிகராக அவதாரம் எடுத்தார்.

முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் வெற்றிவாகை சூடி வந்த மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்தது திரை உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. 

நிதிஷ் வீரா: புதுப்பேட்டை, காலா, அசுரன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நிதிஷ் வீரா அவர்கள் ஆரம்ப காலங்களில் பட வாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டாராம்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021 உடல் நிலை மோசமாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  இறந்தார். இறப்பிற்கு பின் நடிகர் சங்கங்கள் மூலம் இவரது குடும்பத்திற்கு எந்த ஒரு நிதி உதவியும் வழங்கப்படவில்லை.

போண்டாமணி: நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடியில் கலக்கிய இவர் இரு சிறுநீரகங்களும் செயலற்ற நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விஜயகாந்த் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவி செய்த போதும், நோய்,  சினிமாவில் வாய்ப்பு இல்லாதது, கடன், வறுமை, என பல காரணங்களால்  வாழ்வின் கடைசி நேரத்தில் சிதைக்கப்பட்டார் என்பதே உண்மை.

மாறன்: விஜய்யின் கில்லி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்தும், மேடை கலைஞராகவும் பிரபலமான, நகைச்சுவை நடிகர் மாறன் கொரோனா பெருந் தொற்றின் இரண்டாம் அலையில் மறைந்து போனார்.

கலைஞர்களை கண்டுகொள்ளாத மீடியாக்கள்

வடிவேல் பாலாஜி: சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான வடிவேல் பாலாஜி பல்வேறு போராட்டங்களுக்கு பின் வெள்ளி திரையில் காமெடியில் ஜொலிக்கலானார்.

2020 இல் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், போதிய பண வசதி இன்றி அரசு மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டார். அங்கும் சிகிச்சை பலனின்றி இறந்தது திரை உலகில் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

லொள்ளு சபா சேசு: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சேசு, சந்தானத்தின் சில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இவரின் காமெடி அல்டிமேட் ஆக இருந்தது. 

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்ற போதும் நடிகர் சங்கமும், இவருடன் இணைந்து நடித்த சந்தானமும் இவரை கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. 

இவர்களது திறமைகளை பயன்படுத்திய மீடியாக்களும், பணம் இன்றி உயிருக்கு போராடும் நிலைமையில் கூட இந்த மாதிரியான கலைஞர்களை கண்டு கொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது.

மெடிக்கல் இன்சூரன்ஸ் போன்ற எந்த ஒரு  பாதுகாப்பு இல்லாத இந்த மாதிரியான கலைஞர்களை நடிகர் சங்கமும் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறது.

இதற்கு தலைவர் விஷால் ஏதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், மருத்துவ உதவி கோரும் கலைஞர்களுக்கு உதவியாக இருக்கலாம்.

Trending News