ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சப்போர்ட் கேரக்டரில் நடித்து வாழ்க்கை ஓட்டின 6 நடிகர்கள்.. எது கொடுத்தாலும் நின்னு பேசும் விஜய் நண்பர்

பொதுவாக எந்த படமாக இருந்தாலும் ஹீரோ ஹீரோயின்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்த படத்திற்கு ஒரு சப்போர்ட்டிங் கேரக்டர் தேவைப்படும். அந்த கேரக்டர் சில படங்களில் நடிகர் நடிகைகளை விட அதிகமாக பேசப்பட்டு வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி சில கேரக்டர்கள் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே ஓட்டி இருப்பார்கள். அப்படிப்பட்ட கேரக்டர்களை பற்றி பார்க்கலாம்.

எம் எஸ் பாஸ்கர்: இவர் தமிழில் திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஞானப்பரவை, மக்கள் என் பக்கம், டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், தமிழன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதுவரை இவருக்கு அங்கீகரிக்கப்படாத ஒரு கேரக்டர் தான் கிடைத்தது. அதன் பின் விஜயகாந்த் படமான எங்கள் அண்ணா படத்தின் மூலம் பரிச்சயமான நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திருப்பாச்சி, சுக்கிரன், சிவகாசி, வரலாறு, கிரீடம், அழகிய தமிழ் மகன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் எத்தனையோ தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை சப்போட்டிங் கேரக்டரில் மட்டும்தான் நடித்து வருகிறார்.

சுப்பு பஞ்சு அருணாச்சலம்: இவர் பெரும்பாலும் துணை மற்றும் நகைச்சுவை படங்களில் நடிப்பதற்கு மிகவும் பிரபலமாகினர். அத்துடன் இவர் பிரபல எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் பஞ்சு அருணாச்சலம் மகன் ஆவார். சூப்பர் ஹிட் தமிழ் நகைச்சுவை திரைப்படமாக வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சயமானார். இதனைத் தொடர்ந்து மாஸ் என்கிற மாசிலாமணி, அரண்மனை, பலூன், தலைவா போன்ற பல படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் அப்பா அளவுக்கு இவரால் பிரபலம் அடையாமல் போய்விட்டார்.

Also read: பல வருட சினிமா ட்ரெண்டை மாற்றிய 5 இயக்குனர்கள்.. அவெஞ்சர்ஸையே மிரள வைத்த ரஜினி

சம்பத் ராம்: இவர் தமிழ், மலையாளம், கன்னடா மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் முதல்வன் படத்தில் சப் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வல்லரசு, தீனா,ரமணா, திருப்பாச்சி, கபாலி, விசுவாசம், சங்க தலைவன் மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இவர் தொடர்ந்து எல்லா படங்களிலும் ஒரு சப்போர்ட் கேரக்டராக தான் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் இன்னும் அதிகமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் சொல்லலாம்.

பொன்வண்ணன்: இவர் இயக்குனர் மற்றும் குணச்சித்திர கார்டில் நடிப்பதில் மிகவும் பிரபலமானவர். அதிலும் இவர் நடித்த கருத்தம்மா படத்தை யாராலையும் மறுக்க முடியாது அந்த அளவிற்கு இவருடைய கேரக்டரில் வாழ்ந்து இருப்பார். இதனை தொடர்ந்து மாமன் மகள், கட்டப்பஞ்சாயத்து, சேனாதிபதி, எட்டுப்பட்டி ராசா, பருத்திவீரன், சிலம்பாட்டம், மாயாண்டி குடும்பத்தார், தலைவா, சதுரங்க வேட்டை, கடைக்குட்டி சிங்கம், சுல்தான் போன்ற பல படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டராக நடித்திருக்கிறார்.

Also read: சக நடிகைகளை பொறாமை பட வைத்த சாய் பல்லவியின் 4 கதாபாத்திரம்.. தனுசுக்கு டஃப் கொடுத்த நடிகை

ரமேஷ் கண்ணா: இவர் இயக்குனர், எழுத்தாளர், காமெடியன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார். தமிழில் முந்தானை முடிச்சு படத்தில் ஆரம்பித்து காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், ஜோடி, அட்டகாசம், வரலாறு, தசாவதாரம், வீரம், சாமி 2 போன்ற பல படங்களில் சப்போட்டிங் கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படி எல்லா படங்களிலும் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து இவருடைய வாழ்க்கையை ஓட்டிவிட்டார் என்றே சொல்லலாம்.

ஸ்ரீமன்: இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணச்சித்திரா கேரக்டரில் நடித்திருக்கிறார். தமிழில் புதிய மன்னர்கள் என்ற படத்தில் விக்ரமின் நண்பராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பிரியம், ராசி, நிலாவே வா, நெஞ்சினிலே, சேது, தீனா, பிரண்ட்ஸ், மனதை திருடி விட்டாய், பஞ்சதந்திரம், சொக்கத்தங்கம், வசீகரா, போக்கிரி போன்ற பல படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து மிகவும் பரிச்சயமான நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதிலும் விஜய்யின் நண்பராக பல படங்களை அவருடன் நடித்திருக்கிறார். ஆனால் இதுவரை எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ஒரு படத்தில் கூட ஹீரோ என்ற கேரக்டரில் நடிக்கவில்லை.

Also read: நைஸ்சா பேசி முதல் மனைவியின் சம்மதத்தோடு மறுமணம் செய்த 5 நடிகர்கள்.. மச்சினிச்சியும் கட்டி கிட்ட கார்த்தி

Trending News