வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சீரியலில் இருந்து சினிமாவில் சாதித்த 6 நடிகர்கள்.. விடுதலை குமரேசனாக முதல்படி எடுத்து வைத்த சூரி

Actor Soori: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நிறைய பிரபலங்கள் சென்றுள்ளனர். ஆனால் ரியாலிட்டி ஷோவில் கலந்து பிரபலமானவர்கள் தான் சிவகார்த்திகேயன், சந்தானம். ஆனால் சிலர் சீரியலில் நடித்து ஹீரோ அவதாரம் எடுத்துள்ளனர். அப்படி மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு என நிரூபித்த 6 பிரபலங்களை பார்க்கலாம்.

விஜய் சேதுபதி : இப்போது டாப் நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இருக்கக்கூடியவர் விஜய் சேதுபதி. சினிமாவில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் தான் விஜய் சேதுபதி நடித்து வந்தார். அதற்கு முன்னதாக இவரின் தொடக்கம் என்னவென்றால் பெண் என்ற சீரியல் தான். அதன் பிறகு தான் வெளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

Also Read : விஜய் சேதுபதியால் அந்தரத்தில் நிற்கும் விடுதலை 2.. கூலாக வெறுப்பேற்றிய வெற்றிமாறன்

விமல் : பெரும்பாலும் நகைச்சுவையான படங்கள் தான் தனக்கு வரும் என்பதை சரியாகப் புரிந்து கொண்டு, அதுபோன்ற கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விமல். இந்நிலையில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான சித்தி என்ற தொடரில் தான் விமல் அறிமுகமாகி இருந்தார்.

சமுத்திரக்கனி : இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் சமுத்திரக்கனி. அவருடைய படங்கள் சமூகத்திற்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் விதமாகத்தான் இருக்கும். இந்நிலையில் சமுத்திரகனியும் சீரியலில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்தவர் தான். அதாவது ரமணி ரமணி என்ற சின்னத்திரை தொடரில் இவர் நடித்திருந்தார்.

Also Read : வில்லனாக மாறிய 5 இயக்குனர்கள்.. அக்கட தேசத்திலும் வெளுத்து வாங்கும் சமுத்திரக்கனி

மாதவன் : பெண்கள் கொண்டாடும் கதாநாயகனாக இருந்து வருபவர் மேடி. பல மொழி படங்களில் முன்னணி நடிகராக மாதவன் வலம் வந்திருக்கிறார். மேலும் ராக்கெட்டரி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார். இந்நிலையில் மாதவன் பனேகி அக்னி பாத் என்ற சின்னத்திரை தொடரின் மூலம் தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

கவின் : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் கவின். இப்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக பட்டையை கிளப்பி வருகிறார். அதுவும் அவருடைய நடிப்பில் வெளியான டாடா படம் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் கவின் கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரி : காமெடி நடிகராக மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் சூரி. ஆனால் சமீபத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக உருமாறி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தார். இப்போது விடுதலை குமரேசனாக முதல் படி எடுத்து வைத்திருக்கும் சூரியின் ஆரம்பம் சீரியல்தான். அதாவது சன் டிவியில் சஞ்சீவ் நடிப்பில் வெளியான திருமதி செல்வம் தான் சூரியின் தொடக்கம்.

Also Read : சூரியை பார்த்து மீண்டும் பழைய ட்ராக்கிற்கே வந்த சந்தானம்.. கைவசம் இத்தனை படங்களா?

Trending News