திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

தயாரிப்பாளர்களை மண்ணைக் கவ்வ வைத்த 6 நடிகர்கள்.. இருக்கிறதை விட்டு பறக்க ஆசைப்பட்ட ஆதி, ஜீவி

சினிமாவைப் பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ எதுவுமே அவ்வளவு ஈசியாக கணிக்க முடியாது. அதிலும் சில நடிகர்களின் படங்கள் என்றாலே நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக சில படங்கள் அவர்களுக்கு அமைத்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் தவித்து இருக்கிறார்கள். எந்தெந்த நடிகர்களால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அதர்வா: இவர் தன்னுடைய அப்பாவின் புகழால் சினிமாவிற்கு ஈசியாக நுழைந்து விட்டார். ஆனால் தொடர்ந்து ஹீரோவாக இருக்க வேண்டுமென்றால் தனக்கு என்று தனி திறமை வேண்டும் என்று பல படங்களில் போராடி ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கடைசியாக நடித்த குருவி ஆட்டம், தூண்டுதல், பட்டத்து அரசன் போன்ற படங்களில் மூலம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இதனால் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் மண்ணைக் கவியது.

கலையரசன்: இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த நந்தலாலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தார். அதன் பிறகு அட்டக்கத்தி, முகமூடி, மதயானைக் கூட்டம், மெட்ராஸ், கபாலி, தானா சேர்ந்த கூட்டம், போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் அதே கண்கள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பெரிய சரிவை ஏற்படுத்தியது.

Also read: 2023ல் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட 6 படங்கள்.. விட்டதை பிடித்த ஷாருக்கான்

ஹரிஷ் கல்யாண்: இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அரிது அரிது, சட்டப்படி குற்றம், ஜெய் ஸ்ரீ ராம், பொறியாளன் என்ற படங்களில் நடித்திருந்தாலும் இவரை அங்கீகரிக்கப்படும் படி எந்த கதாபாத்திரம் அமையவில்லை. அதன் பிறகு பிக் பாஸில் சென்று மிகவும் பிரபலமாகி வந்தார். அதனால் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு இவரை ஹீரோவாக ஆக்குவதற்கு பல படங்களில் தேர்வு செய்யப்பட்டார். அப்படி இவர் நடித்த படம் தான் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இவர் நடித்த தனுசு ராசி நேயர்களே, ஜெர்சி படங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அட்டகத்தி தினேஷ்: இவர் ஈ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார். அதன் பிறகு எவனோ ஒருவன், ஆடுகளம், மௌனகுரு போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இதுவரை பரிச்சயமாகாமல் அட்டகத்தி படத்தில் நடித்த பிறகு பிரபலமானார். இதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும், குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை போன்ற படங்களில் மிகத் திறமையாக நடித்து ஒரு வெற்றி நடிகராக இடம் பிடித்தார். ஆனால் அதன் பிறகு இவர் நடித்த படங்களான உள்குத்து, நானும் சிங்கிள் தான், பல்லு படாம பாத்துக்கோ போன்ற படத்தினால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

Also read: விடாமுயற்சி படத்தின் கதாநாயகி யார்? வரிசையாக 5 நடிகைகளை களமிறக்கியுள்ள லைக்கா

ஹிப் ஹாப் ஆதி: இவர் இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டதால் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க ஆரம்பித்து விட்டார். இவர் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் இவர் நடித்த படங்கள் முலம் தயாரிப்பாளருக்கு சொல்லும்படியாக பெரிய லாபத்தையும் கொடுக்கவில்லை. அதனால் தயாரிப்பாளர்கள் யாரும் இவரை நம்பி வருவதில்லை என்பதால் இவரை தயாரிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ்: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ஏ ஆர் ரகுமானின் அண்ணன் மகனாகவும் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு படங்களில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவர் நடிக்கும் படங்கள் பொதுவாகவே குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாகவும் இருக்காது. அத்துடன் டபுள் மீனிங் வார்த்தைகளும் அதிகம் வைத்து அமைந்திருக்கும். ஜி பி பிரகாஷ் நடித்த படம் என்றாலே அது அடல்ஸ் மட்டும் தான் பார்க்கக்கூடிய படம் என்று பெயர் வாங்கி விட்டார். அதனாலேயே இவர் படம் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் பெறாமல் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு இவர் பேசாம தெரிந்த இசையை வைத்து இருந்திருக்கலாம். இருக்கிறதை விட்டு பறக்குறது ஆசைப்பட்டால் இப்படித்தான் ஆகும்.

Also read: சப்போர்ட் கேரக்டரில் நடித்து வாழ்க்கை ஓட்டின 6 நடிகர்கள்.. எது கொடுத்தாலும் நின்னு பேசும் விஜய் நண்பர்

- Advertisement -spot_img

Trending News