புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பார்த்த உடனேயே சிரிப்பை மூட்டும் 6 நடிகர்கள்.. சின்ன கவுண்டர் விஜயகாந்த் ஆகவே வாழும் நமோ நாராயணா  

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரையிலும் ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். அதிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் வெகு விரைவிலேயே பிரபலமாகி விடுகின்றனர். அந்த அளவிற்கு தங்களது நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அப்படியாக பார்த்த உடனேயே சிரிப்பை மூட்டும் 6 நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

வெங்கல் ராவ்: தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் வெங்கல் ராவ். அதிலும் ஸ்டண்ட் கலைஞராக சினிமா துறையில் அறிமுகமான இவர் எக்கச்சக்கமான படங்களில் காமெடி ரோலில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். அதிலும் வைகைப்புயல் வடிவேல் உடன் இவர் அடித்திருக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பார்த்த உடனேயே சிரிப்பை வரவழைக்கக் கூடியவர் ஆவார். 

Also Read: வடிவேலு பகைத்துக்கொண்ட 5 ஹீரோக்கள்.. குண்டக்க மண்டக்க பார்த்திபனுடன் போட்ட சண்டை

ரெடின் கிங்ஸ்லி: தமிழ் சினிமாவில் ஆர்கே பாலாஜி நடித்த எல் கே ஜி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சமான நடிகராக வலம் வந்தவர் தான் ரெடின் கிங்ஸ்லி. அதனைத் தொடர்ந்து டாக்டர் படத்தில் இவருடைய காமெடி கேரக்டர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. அதிலும் யோகி பாபு உடன் இவர் அடித்த கூத்துக்கு அளவே இல்லை. அதுமட்டுமல்லாமல் ஸ்கூல் பாப்பா கெட்டபில் இவர் அடித்த லூட்டி மொத்த தமிழ் சினிமாவையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது என்று சொல்லலாம்.

நமோ நாராயணா: சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில், நடித்ததன் மூலம் பரிச்சயமான நடிகராக வலம் வந்தவர் தான் நமோ நாராயணன். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் காமெடி ரோலில் மாஸ் காட்டி இருப்பார். அதிலும் சின்ன கவுண்டர் விஜயகாந்த் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து நடித்து இருக்கும் நமோ நாராயணன் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவரானார்.

Also Read: படுதோல்வியால் சம்பளத்தை திருப்பிக் கேட்ட தயாரிப்பாளர்.. நாலாபக்கமும் அடிவாங்கும் சிவகார்த்திகேயன்

முனிஷ்காந்த்: சினிமாவில் சிறுசிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் முனீஸ்காந்த். தொடர்ந்து முண்டாசுப்பட்டி, மரகத நாணயம், ராட்சசன் போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதிலும் தனது நக்கல் கலந்த பேச்சின் மூலம் பார்த்த உடனேயே சிரிப்பை மூட்டும் அளவிற்கு நகைச்சுவையில் பின்னி பெடல் எடுப்பார். 

லொள்ளு சபா மனோகர்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் காமெடி நடிகர் மனோகர். அதிலும் இவர் நடித்த அனைத்து படங்களிலும் காமெடி ரோலில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். இதனைத் தொடர்ந்து தனது தனித்துவமான நடிப்பின் மூலம் நகைச்சுவை உணர்வில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் என்றே சொல்லலாம். 

மொட்டை ராஜேந்திரன்: சினிமாவில் வில்லன் ரோலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் மொட்ட ராஜேந்திரன். இதனைத் தொடர்ந்து தன்னுடைய வித்தியாசமான குரல் வளத்தினை கொண்டு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், ஒரு காலகட்டத்திற்கு பின் காமெடி ரோலில் பட்டையை கிளம்பி வந்தார். அதிலும் டெரர் வில்லனாக இருந்த மொட்ட ராஜேந்திரன் தற்போது பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கக் கூடிய காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்.

Also Read: வயிறு குலுங்க சிரிக்க வச்சுட்டு காணாமல் போன 7 காமெடியன்கள்.. அதல பாதாளத்திற்கு சென்ற மொட்டை ராஜேந்திரன்

Trending News