சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

சிரிப்பு வில்லனாக மாறிய 6 டெரர் நடிகர்கள்.. கபாலியை பார்த்து நடுங்கிய 80’s கிட்ஸ்

ஒரு காலகட்டத்தில் டெரர் வில்லனாக இருந்த ஒரு சில நடிகர்களை தற்போது காமெடி பீஸாக மாற்றியுள்ளனர். கொடூர வில்லனாக பல படங்களில் அந்த நடிகர்கள் மிரட்டியிருப்பார்கள். ஆனால் அவர்கள் இப்போது காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் விரும்பும்படி தான் உள்ளது. அவ்வாறு டெரர் நடிகர்களாக இருந்து சிரிப்பு வில்லனாக மாறிய 6 நடிகர்களை பார்க்கலாம்.

மொட்டை ராஜேந்திரன் : வித்தியாசமான குரல் வளத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். நான் கடவுள் படத்தில் தாண்டவன் என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இவ்வாறு டெரர் வில்லனாக இருந்த மொட்டை ராஜேந்திரன் தற்போது காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்.

ஆனந்த்ராஜ் : தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ஆனந்த்ராஜ். ரஜினியின் பாட்ஷா படத்தில் இவர் நடித்த இந்திரன் கதாபாத்திரம் இன்றளவும் பலராலும் மறக்க முடியாது. இந்நிலையில் தற்போது வெளியாகும் படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் ஆனந்தராஜ் நடித்து வருகிறார்.

பசுபதி : கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் பசுபதி. இவர் தனது இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் தூள் படத்தில் சொர்ணாக்கா தம்பி ஆதியாக மிரட்டியிருப்பார். இந்நிலையை தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் பசுபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ரவி மரியா : இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ரவி மரியா. இவர் வெயில், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தார். ஆனால் மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் சிரிப்பு வில்லனாக நடித்திருந்தார்.

மகாநதி சங்கர் : கமலஹாசன் நடிப்பில் வெளியான மகாநதி படத்தின் மூலம் அறிமுகமானவர் மகாநதி சங்கர். அதன்பிறகு பாட்ஷா, அமர்க்களம், தீனா உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். ஒரு மாஸ் வில்லனாக இருந்த மகாநதி சங்கர் தற்போது காமெடி வில்லனாக நடித்து வருகிறார்.

பொன்னம்பலம் : நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் பொன்னம்பலம். முத்து, அருணாச்சலம், சிம்ம ராசி, நாட்டாமை ஆகிய படத்தில் நடித்திருந்தார். ஆனால் வால்டர் வெற்றிவேல் படத்தில் பொன்னம்பலம் நடித்த கபாலி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருந்தது. இன்றுவரை கபாலி பொன்னம்பலம் என்று கபாலி கதாபாத்திரம் அவர் பெயர் உடனே இருக்கிறது

Trending News