வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திருமணத்திற்கு பிறகு கள்ள உறவில் இருந்த 6 நடிகர்கள்.. பிரபுதேவாவை வசியம் செய்த நயன்

6 Actors: படங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள் போலவே நிஜ வாழ்க்கையிலும் ஒரு சில சம்பவங்கள் உண்மையாக நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் மனவாழ்க்கை கொள்ளும் சினிமா பிரபலங்கள், கருத்து வேறுபாடுகளால் பிரிவது தற்பொழுது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது.

அவ்வாறு இல்லாமல் திருமணத்திற்கு பிறகும் அன்புக்கு ஏங்கி, அவை காதலாக மலர்ந்து உறவு கொண்ட பிரபலங்களும் இருக்கிறார்கள். அதுபோன்று திருமணத்திற்கு பிறகு கள்ள உறவுகளை மேற்கொண்ட 6 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read:  மலையாளத்தில் அமோக கலெக்சன்.. காசு மழை கொட்டும் என ரீமேக் செய்து மண்ணை கவ்விய 5 படங்கள்

கமல்: சினிமாவில் உலகநாயகனாக வலம் வந்த இவர் நிஜத்தில் காதல் மன்னன் ஆகவும் இருந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து வாணி கணபதி என்னும் டான்ஸரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், நடிகையான சரிகா மீது காதல் கொண்டார். முறையாக இவர்களின் பிரிவு இல்லாத போது, சரிக்காவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் கமல் இருந்து வந்தார். இப்பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரிதாக கிசு கிசுக்கப்பட்டது. அதற்குப் பின்பு இவர்களுக்கு முதல் மகள் பிறந்த பிறகுதான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

ரஜினி: ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்றி, அதன்பின் தனக்கென ஒரு ஸ்டெலை உருவாக்கிக் கொண்டு தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராய் வலம் வந்தவர் ரஜினிகாந்த். அவ்வாறு புகழின் உச்சியில் இருந்த, அந்த காலகட்டத்தில் இவர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோயின்கள் ஏராளம். இந்நிலையில் லதாவை திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்த். அக்கால கட்டத்தில் பிரபலமாய் பார்க்கப்பட்ட அழகான ஹீரோயினான அமலாவை காதலித்தார். அதன்பின் இயக்குனர் பாலச்சந்தர் இவற்றை அறிந்து, இது சரிவராது சினிமாவில் பெற்ற பெயர் கெட்டுப் போகும் என கூறிய பின்பு அக்காதல் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read:  குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்

பிரபுதேவா: தமிழ் சினிமாவின் சிறந்த நடன இயக்குனர் ஆகவும், நடிகராகவும் இருக்கும் இவருக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கும் நிலையில், நயன்தாராவை காதலித்து வந்தார். இவர்களை இணைத்து பெரிதும் கிசுகிசுக்கப்பட்டு, இவரின் மனைவி கொடுத்த புகாரால், இவர்கள் காதல் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து தன் மனைவியிடம் விவாகரத்து வாங்கிய பின் ஹிமானி சிங் என்பவரை மறுதிருமணம் செய்து கொண்டார்.

கார்த்திக்: அக்காலத்தில், தந்தையின் சிபாரிசில் அறிமுகம் ஆகி, அதன்பின் தன் நடிப்பால் நவரச நாயகன் என பெயர் பெற்றவர் கார்த்திக். இவர் ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவ்விருவர்களின் அன்புக்கு அடையாளமாக இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கு இடையே ராகினியின் தங்கையான ரதியின் மீது காதல் வயப்பட்டார் அதன்பின் இவரையும் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:  கேஜிஎஃப் இயக்குனருடன் திடீர் சந்திப்பு.. பிரபாஸை ஒரு கை பார்க்க தயாரான ஆண்டவர்

தனுஷ்: தன் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் படிப்படியாய் முன்னேறி தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்தது ஊருக்கே தெரிந்து ஒன்றாகும். இவர்களுக்கு இரு மகன்களும் உள்ளார்கள். இருப்பினும் தனுஷ் தன் சக நடிகைகளோடு டேட்டிங் செய்வது போன்ற பல கிசு கிசுப்புக்கு ஆளாகினர். தற்போது கருத்து வேறுபாடுகளால் பிரிந்து உள்ள இவர்கள் இருவரிடையே இது போன்ற நிகழ்வு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கே எஸ் ரவிக்குமார்: தமிழ் சினிமாவில் இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறது. பாட்டாளி, படையப்பா, பஞ்சதந்திரம் போன்று அடுத்தடுத்து வெளிவந்த இவரின் படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். இதன் மூலம் கொண்ட பழக்கத்தால் இவர்கள் இடையே காதல் மலர்ந்து டேட்டிங் வரை சென்று விட்டது. அதை அறிந்த கே எஸ் ரவிக்குமாரின் மனைவி மேற்கொண்ட முயற்சியால் இவர்களின் உறவு முடிவுக்கு வந்தது.

Trending News