வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

2022-ல் சர்ச்சையில் சிக்கிய 6 நடிகைகள்.. மீடியாவையே கிடுகிடுக்க வைத்த இரவின் நிழல் நாயகிகள்

புது வருடம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. அனைவரும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் நேரத்தில் இந்த வருடம் பலருக்கு நல்ல விஷயங்களையும் சிலருக்கு கசப்பான அனுபவங்களையும் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இந்த 2022ல் சற்றியை கிளப்பி சோசியல் மீடியாவையே கிடுகிடுக்க வைத்த ஆறு நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

திவ்யா ஆறாம் இடத்தை பிடித்திருக்கும் இவர் சில மாதங்களாகவே மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சீரியல் நடிகையான இவர் சக நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் திவ்யாவை விட்டுவிட்டு அவர் மற்றொரு சீரியல் நடிகையுடன் இருப்பதாக பரபரப்பு புகார் கிளம்பியது. திவ்யா கொடுத்த இந்த புகாரின் பேரில் அர்ணவ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: நயன்தாரா பாணியில் நடித்து அவரேயே ஓரம்கட்டி விருது வாங்கிய நடிகை.. புலம்பி வரும் லேடி சூப்பர்ஸ்டார்

மகாலட்சுமி பல சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கும் இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் மகாலட்சுமி இவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது பணத்திற்காக மட்டும்தான் என்ற சர்ச்சை கிளம்பியது. ஆனாலும் அதையெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் இவர் பற்றிய பல சர்ச்சை செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் மகாலட்சுமி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.

பிரிகிடா இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தார். அதிலும் அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அவர் நடித்தது பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அது மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசிய ஒரு கருத்தும் கண்டனத்திற்கு ஆளானது. அதன் பிறகு பிரிகிடா அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். அந்த வகையில் இவர் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

ரேகா நாயர் சீரியல் நடிகையான இவர் இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சியில் இவர் நடித்தது குறித்து ஏகப்பட்ட மோசமான விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனும் அதை கொச்சையாக விமர்சித்து இருந்தார். இதனால் கடுப்பான ரேகா நாயர் நடுரோட்டில் அவரை நிக்க வைத்து சரமாரியாக கேள்வி எழுப்பினார். அந்த வகையில் சோசியல் மீடியாவையே பரபரப்பாகிய ரேகா நாயர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

Also read: திரிஷாவுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா.. விஜய்க்கு ஜோடி போட தீயாக வேலை செய்யும் குந்தவை

அமலாபால் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே திருமணம், விவாகரத்து என்று பரபரப்பை கிளப்பிய அமலாபால் ஆடை திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளானார். அதை தொடர்ந்து அவ்வப்போது சோசியல் மீடியாவில் இவர் வெளியிடும் போட்டோக்களும் சலசலப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இவர் தன் நண்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று வெளிவந்த செய்திகளும், போட்டோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த அமலா பால் தன் ஆண் நண்பர் மேல் காவல்துறையில் புகார் கொடுத்தார். இவ்வாறு இந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

நயன்தாரா சர்ச்சைகளின் ராணியாக வலம் வரும் இவர் இந்த வருடம் மீடியாக்களுக்கு பல செய்திகளை வாரி வழங்கினார். அந்த வகையில் இவருடைய திருமணத்தை இவர் வியாபாரம் ஆக்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில மாதங்களிலேயே இரட்டை குழந்தைக்கு இவர் தாயானது மீடியாவை உலுக்கியது. அந்த வகையில் வாடகைத்தாய், திருமணம், பட தோல்வி, உருவ கேலி என்பது போன்ற பல விஷயங்களால் இவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Also read: நயன்தாரா இடத்தை பிடிக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்

Trending News