திங்கட்கிழமை, மார்ச் 3, 2025

பிரபலங்கள் மீது பொது வெளியில் குற்றம் சாட்டிய 6 நடிகைகள்.. சீமானை நிலை குலைய வைத்திருக்கும் விஜயலக்ஷ்மி!

Seeman: பிரபலங்களின் ஒரு சில தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வருவது கிடையாது.

சில நேரங்களில் இவ்வளவு பெரிய பிரபலம் மீது புகார் கொடுத்தால் நமக்கு ஏதாவது பிரச்சனை வரும் என சிலர் ஒதுங்கிக் கொள்வதும் உண்டு.

ஆனால் ஒரு சில நடிகைகள் இதிலிருந்து மாறுபட்டு பிரபலங்களால் தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆறு நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

சீமானை நிலை குலைய வைத்திருக்கும் விஜயலக்ஷ்மி!

விஜயலக்ஷ்மி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்- நடிகை விஜயலட்சுமி பிரச்சனை வருஷத்துக்கு ஒருமுறை பூதாகரமாகும். அதன் பின்னர் காணாமல் போய்விடும்.

ஆனால் இந்த முறை சீமானுக்கு சமன் அனுப்பி நேரில் ஆஜராக சொல்லும் அளவுக்கு சென்றிருக்கிறது. நேற்று சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்தது தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

சின்மயி: Me Too புகார்கள் அதிகரித்த சமயத்தில் பின்னணி பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்துவுக்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டை எடுத்து வைத்தார்.

அந்த சமயத்தில் அவரை பாட்டு பாடக்கூடாது, டப்பிங் பேசக்கூடாது என பல தடைகளுக்கு உள்ளாக்கினார்கள்.

ஒட்டுமொத்த சினிமா உலகமும் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தனி ஒரு பெண்ணாக அவரை எதிர்த்து நின்னார்.

ஸ்ரீ ரெட்டி: படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி தன்னை தவறாக பயன்படுத்தினார்கள் என பல நடிகர்களின் பெயர்களை வெளியே கொண்டு வந்தார் ஸ்ரீரெட்டி.

ஸ்ரீகாந்த், விஷால், நானி, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் என நிறைய பிரபலங்களின் பெயர் இதில் அடிபட்டது.

நயன்தாரா: நடிகை நயன்தாரா தனுஷின் பெருந்தன்மை, தன்னடக்கம் எல்லாம் மேடைக்கு மட்டும் தான். உண்மையிலேயே தன்னுடைய சக கலைஞர்கள் வளருவது அவருக்கு பிடிக்காது என்று நேரடியாக மிகப்பெரிய அறிக்கையின் மூலம் குற்றம் சாட்டினார்.

விசித்ரா: பிக் பாஸ் ஏழாவது சீசன் மூலம் தமிழக மக்களிடையே பெரிய அளவில் பெயர் வாங்கினார் நடிகை விசித்ரா. பல வருடங்களுக்கு முன்பு நடிகர் பாலகிருஷ்ணா தனக்கு தொந்தரவு கொடுத்தார் என வெளிப்படையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

சிம்ரன்: நடிகை சிம்ரன் அவருடைய தங்கை மோனல் இறந்த சமயத்தில் டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பிதான் இதற்கு காரணம் என சட்டப் போராட்டங்கள் நடத்தினார்.

நடிகை மும்தாஜ் அந்த சமயத்தில் மோனல் தங்கி இருந்த ரூமுக்கு சென்று பல தடயங்களை அழித்துவிட்டு வந்ததாகவும் சிம்ரன் வெளிப்படையாக பேசியிருந்தார்.

Trending News