வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கேரியரை கெடுத்துக்கொண்ட 6 குழந்தை நட்சத்திரங்கள்.. முகம் சுளிக்க வைத்த அஜித் மகள்

6 Childhood Actresses Lost The Market: குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான நடிகைகள் ஹீரோயின் வயதை எட்டியவுடன் இன்னும் பிரபலமாகுவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படியே அதற்கு நேர் எதிராக ஓவர் கிளாமர் காட்டி தனது கேரியரை 6 குழந்தை நட்சத்திரங்கள் கெடுத்துக் கொண்டனர்.

ரவீனா தாஹா : ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ரவீனா தாஹா. இவர் சின்னத்திரை தொடர்களிலும் கதாநாயகியாக நடித்த நிலையில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருவதாக சிலர் கூறி வந்தனர். மேலும் கவர்ச்சியான போட்டோ சூட் ஆகியவை இவரது வளர்ச்சிக்கு சறுக்கலாக அமைந்தது.

Also Read : பத்தி எறிய போகும் பிக் பாஸ் வீடு.. டிஆர்பிக்காக முரட்டு வில்லனை தூக்கிய விஜய் டிவி

கேப்ரில்லா : விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் கேப்ரில்லா. சில வெள்ளித்திரை படங்களிலும் நடித்த கேப்ரில்லா இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்ற நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஸ்ரேயா ஷர்மா : ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் குழந்தையாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரேயா வர்மா. சிறுவயதிலேயே நிறைய படங்களில் நடித்த இவர் அதன் பிறகு உடல் எடையை அதிகமாகி உள்ளதால் பட வாய்ப்பு இல்லாமல் போனது.

Also Read : மனைவிக்கு வெளிநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்.. நாடு நாடாக சுற்றியது வீண் போகல

சாரா : ஏஎல் விஜய்யின் தெய்வத்திருமகள் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் நடிகை சாரா. இதைத்தொடர்ந்து சைவம் படத்தில் நடித்திருந்த சாரா சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்போது இவருக்கு பட வாய்ப்பு பெரிய அளவில் இல்லை.

எஸ்தர் அனில் : பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்தவர் தான் எஸ்தர். இவர் கவர்ச்சிகரமான போட்டோ சூட் வெளியிட்டு இணையத்தை திக்கு முக்காட செய்துள்ளார். மேலும் இவர் காட்டிய தாராள கவர்ச்சியே பட வாய்ப்பு குறைவதற்கு காரணமாகிவிட்டது. மலையாளத்தில் மட்டும் சில படங்களில் நடித்து வருகிறார்.

அனிகா : அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை அனிகா. சிறுவயதிலேயே இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் அனிகா அடல்ட் மூவியில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இவரே தனது பெயரை இதன் மூலம் கெடுத்துக் கொண்டார்.

Also Read : முதல் முதலாக கோடு போட்ட அஜித்.. ஜெயிலர் வரை தீயாய் பரவும் பழக்க வழக்கம்

Trending News