வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்த்க்கு ஜோடி போட்டு அரசியலில் ஆட்டம் கண்ட 6 நடிகைகள்.. கமலுக்கு குடை பிடிக்கும் ஹீரோயின்

6 actresses who entered the field of politics: சினிமாவில் பேரும் புகழையும் சம்பாதித்த பிறகு வாழ்நாள் முழுவதும் தனக்கு ஒரு பிடிப்பு வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தேர்வு செய்வது அரசியலை தான். அப்படி சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த பின்பு அரசியலில் நுழைந்த நடிகைகள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இந்த வரிசையில் விஜயகாந்த் உடன் ஜோடி போட்டு நடித்துவிட்டு அரசியலில் ஆட்டம் கண்ட நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்கள் யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

கௌதமி: கிட்டத்தட்ட 125 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தார் கௌதமி. அப்படிப்பட்டவர் சுமார் 25 வருடங்களாக பாஜக கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வந்தார். கடைசியாக ராஜபாளையம் தொகுதியில் நின்னு ஜெயித்தார். ஆனால் அங்கே இவருக்கு ஏற்பட்ட பண மோசடி பிரச்சனையால் கட்சியை வேண்டாம் என்று ராஜினாமா கடிதத்தை கொடுத்து வெளியே வந்து விட்டார்.

ராதிகா சரத்குமார்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் ஹீரோயினாக நடித்து மிகவும் பிரபலமான நடிகை என பெயர் பெற்றார். அப்படிப்பட்டவர் 2006 ஆம் ஆண்டு இவருடைய கணவர் சரத்குமார் அதிமுகவில் இணைந்ததால் அவருக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கை கொடுத்தார். அதன் பின்பு தனி கட்சியை ஆரம்பிப்பதற்காக சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவராக பதவியை ஏற்றார்.

Also read: ஊர் வாய்க்கு பயந்து வந்த சிவகுமார், கார்த்தி.. கேப்டன் சமாதியில் தேம்பித் தேம்பி அழுத சூர்யா

ரோஜா: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தார். அதன் பின் ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் நின்னு வெற்றி பெற்றுவிட்டார். தற்போது சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

குஷ்பூ: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் ஃபேவரிட் ஹீரோயினாக மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும் அளவிற்கு முன்னணியில் வந்தார். அதன் பின் பாஜக, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளிலும் அவ்வப்பொழுது தாவிக்கொண்டு பணியாற்றி வந்தார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதியா ஜனதா கட்சி சார்பாக சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்னு 32,200 வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

ஸ்ரீப்ரியா: கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேல் நடித்து சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து கமல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மையத்தின் குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

சௌந்தர்யா: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து அனைவரது மனதிலும் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்து கொண்டார். அதன் பின் இவருடைய அண்ணன் பிஜேபியில் உறுப்பினராக இருப்பதால் அவருக்கு சப்போர்ட் பண்ணும் விதத்தில் பிஜேபிக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தார். அப்படி ஒரு முறை கட்சி சம்பந்தமாக பேசப் போகும்போது தான் விமான விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இறந்த பின் கிடைத்த 2 ஆசீர்வாதம்.. விஜயகாந்த் ஒரு அதிசய பிறவி

Trending News