வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான 6 நடிகைகள்.. சிவாஜி வீட்டு மருமகளா இப்படி செஞ்சாங்க?

Six Actresses Who Got Married After Pregnancy: பொதுவாக நடிகைகள் பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளி போடும் விஷயத்தை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் சில நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி அதன் பின்பு தாலி வாங்கிக் கொண்டுள்ளனர். அவ்வாறு கர்ப்பமான பின்பு கல்யாணம் செய்துகொண்ட 5 நடிகைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீதேவி : ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் ஸ்ரீதேவி. அதுவும் 16 வயதினிலே படத்தில் இவருடைய மயிலு கதாபாத்திரம் தற்போதும் மனதில் நிற்கக்கூடியது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்டார். அதுவும் ஸ்ரீதேவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது தான் இவர்களது திருமணம் நடந்துள்ளது.

Also Read : பெத்த தாயாலே ஸ்ரீதேவிக்கு வைக்கப்பட்ட சூனியம்.. சாவு வரை துரத்திய அந்த கேடு கெட்ட பழக்கம்

சரிகா : பிரபல நடிகையான சரிகா கமலுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். அப்போது அவர் மீது காதல் வயப்பட்ட சரிகா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார். மேலும் ஸ்ருதிஹாசன் பிறந்த பிறகுதான் கமல் சிவாஜி கணேசன் முன்னிலையில் சரிகாவுக்கு தாலி கட்டினார்.

எமி ஜாக்சன் : மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எமிஜாக்சன். தமிழில் ஒரு சில படங்கள் நடித்த நிலையில் மார்க்கெட்டை இழந்து விட்டார். இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகுதான் எமி ஜாக்சன் தனது காதலனை மணந்து கொண்டார்.

சமீரா ரெட்டி : வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி. இவருக்கும் அக்ஷய் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் சமீராவுக்கு திருமணம் நடக்கும் போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Also Read : விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

இலியானா : பலமொழி படங்களில் ஒரு காலகட்டத்தில் பிசியான நடிகை வலம் வந்து கொண்டிருந்தவர் இலியானா. விஜய்யின் நண்பன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சுஜா வருணி : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சுஜா வருணி. இவர் பெரும்பாலும் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்நிலையில் சிவாஜியின் பேரனான தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது இவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பதிவில் உள்ள நடிகைகள் அனைவருமே திருமணத்திற்கு முன் கர்ப்பமாக இருந்தாலும் அதற்கு காரணமானவர்களை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read : உடல் மெலிந்து கிக்கான புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் ஷிவானி.. கிறங்கி போன இளசுகள்

Trending News