வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திருமணமான நடிகர்களை வளைத்து போட்டு பின் பிரிந்து சென்ற 6 நடிகைகள்.. வசமாக சிக்கிய விக்கி-நயன் ஜோடி

Actress Affair With Married Heroes: சினிமாவில் காதல், திருமணம், திருமணத்தை தாண்டிய உறவு என்பதெல்லாம் ரொம்பவும் சகஜமான ஒன்று. ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் ஒரு சில நடிகைகள் அவர்களை காதலித்து அவர்களுடன் வாழ்ந்து பின் ஏதாவது ஒரு காரணத்திற்காக கழட்டிவிட்டும் இருக்கிறார்கள். இந்த ஐந்து நடிகைகள் திருமணம் ஆன நடிகர்களுடன் உறவில் இருந்து பெண் பிரேக்கப் செய்தவர்கள்.

பிரபுதேவா – நயன்தாரா: நடிகை நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தது ஊர் அறிந்த விஷயம். அவருக்காக மதம் மாறினார், கையில் அவருடைய பெயரைக் கூட பச்சை குத்திக் கொண்டார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கவே நயன்தாரா முடிவெடுத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவர்களது காதல் முறிவில் முடிந்தது. பிரபுதேவாவை பிரிந்த பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து தற்போது நல்ல முறையில் செட்டில் ஆகி இருக்கிறார்.

Also Read:கொழுக் மொழுக் நடிகையை உருகி உருகி காதலித்த ஹீரோ.. சைக்கோ தனத்தை காட்டி விரட்டி விட்ட காதலி

விஜய் – கீர்த்தி சுரேஷ், திரிஷா: தளபதி விஜய் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக காதல் சர்ச்சையில் சிக்காமல் இருந்த நடிகர். அதன் பின்னர் நடிகை திரிஷாவுடன் தொடர்ந்து படங்கள் பண்ணிய போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாகவும், பின்னர் விஜய்யின் குடும்பத்தில் அது மிகப்பெரிய புயலை வீச அந்த காதல் முடிவுக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சமீபத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நெருக்கமான உறவில் இருப்பதாக பல மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன.

கமல்ஹாசன் – ஆண்ட்ரியா: உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிளேபாயாக இருந்தவர். அவரை சுற்றி காதல் சர்ச்சைகள் இல்லாமல் இருந்தால்தான் அதிசயம். அப்படி இருக்கும் பொழுது விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் படங்களில் தொடர்ந்து நடித்ததன் மூலம் ஆண்ட்ரியாவுக்கு கமலஹாசனுடன் காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

மாதவன் – சதா: நடிகர் மாதவன் என்றுமே தமிழ் சினிமா ரசிகைகளுக்கு காதல் இளவரசனாக இருந்து வருகிறார். இவர் மீது பல நடிகைகளுக்கு கிரஷ் உண்டு. மாதவன் பிரியசகி எனும் படத்தில் நடிகை சதா உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். சதாவுக்கும் அதன் பிறகு அவ்வளவாக பட வாய்ப்பு அமையவில்லை.

Also Read:நைட்டு மூணு மணிக்கு போன் செய்து அந்த மாதிரி உறவுக்கு அழைப்பாங்க! வேதனையில் பேசிய நடிகை

எம்ஜிஆர் – ஜெயலலிதா: மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் அப்போதைய இளம் ஹீரோயின்கள் நிறைய பேர் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உறவு மட்டும் இன்றுவரை பேசப்படுகிறது. தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நடித்து வந்த ஜெயலலிதா பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். நீண்ட வருடங்கள் கழித்து எம்ஜிஆர் அரசியலுக்கு வரும்பொழுது அவரே சென்று அழைத்ததின் பெயரில் அவருடைய கட்சியிலும் இணைந்தார் ஜெயலலிதா.

நாகார்ஜுனா – தபு: நடிகர் நாகார்ஜுனா ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் தான் அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்திலேயே நாகார்ஜுனாவுக்கும் நடிகை தபுவிற்க்கும் காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அமலாவையும் விட்டுவிட்டு தபுவை திருமணம் செய்தால் பெயர் கெட்டுப் போய்விடும் என்பதால் இருவரும் தங்களுடைய காதலை முறித்துக் கொண்டனர்.

Also Read:மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா

Trending News