வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

40 வயதிலும் கொள்ள அழகுடன் சுற்றும் 6 நடிகைகள்.. சூர்யாவின் அன்பால் எப்போதும் ஜொலிக்கும் ஜோ

Beautiful Actress: பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு அழகும் வயதும் ரொம்ப முக்கியம். சில நடிகைகளுக்கு 25, 30 வயது ஆனாலே அவர்களுடைய மார்க்கெட் குறைந்து விடுகிறது. அதன் பின் சப்போர்ட்டிங் கேரக்டர், அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தான் வாய்ப்பு வருகிறது. இதற்கு மத்தியில் சில நடிகைகள் 40 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் ஹீரோயின் ஆகவே அழகுடன் சுற்றிக் கொண்டு வருகிறார்கள். அந்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

தபு: இவரிடம் மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருப்பது எதார்த்தமான நடிப்பு. இவருடைய நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் மிகவும் பிரபலமான இவர் பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது 52 வயதாகியும் இன்னும் கொடி கட்டி தான் பறக்கிறார்.

Also read: ஐட்டம் டான்ஸ் ஆடி பண மழையில் குளித்த 5 நடிகைகள்.. ஹீரோயினை விட அதிகம் லாவிட்டு போன ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்: இவரிடம் நம்பி எந்த ஒரு கேரக்டரையும் கொடுக்கலாம். அதை மிக கச்சிதமாக செய்து வெற்றி பெறக்கூடிய நடிகை என்று பெயர் வாங்கி இருக்கிறார். அத்துடன் இவருடைய நடிப்பை ஒரு தனி ஸ்டைல் தான் என்று சொல்லும் அளவிற்கு எல்லா பக்கமும் கொடி கட்டி பறந்து வருகிறார். தற்போது கிட்டத்தட்ட 50 வயதுக்கு மேலாகியும் இன்னும் முக்கியமான கேரக்டரில் ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

ஐஸ்வர்யா ராய்: தற்போது எத்தனை உலக அழகி வந்திருந்தாலும் முதலில் நமக்கு ஞாபகத்துக்கு வரக்கூடியவர் ஐஸ்வர்யா ராய் தான். இவர் இருவர் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்த பிரபலமாகிய நிலையில் அப்படியே பாலிவுட் பக்கம் சென்று முன்னணி ஹீரோயினாக வலம் வந்து விட்டார். தற்போது 50 வயது ஆகி நிலையிலும் முன்னணி ஹீரோயினாகத் தான் நடித்து வருகிறார்.

Also read: ரீ என்ட்ரியில் சரத்குமார் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. பழுவேட்டையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சுப்ரீம் ஸ்டார்

கஜோல்: விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளும் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில் திடீரென்று நடிப்புக்கு குட் பாய் சொல்லிக்கொண்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது 38 வயது தாண்டிய நிலையில் கொல்ல அழகும், பொலிவையும் வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார்.

மஞ்சு வாரியர்: இவர் அசுரன் படத்தின் மூலம் பச்சையம்மா என்ற கேரக்டரில் தமிழ் சினிமாவிற்கு என்டரி கொடுத்தார். எப்படி தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற முத்திரையுடன் நயன்தாரா இருக்கிறார், அதேபோல் மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது மஞ்சுவாரியர் தான். இப்படிப்பட்ட இவருக்கு 44 வயதாகியும் இன்னும் இளமை மாறாமல் துரு துருவென நடிப்பை கொடுத்து வருகிறார். அத்துடன் இவர் மிகப்பெரிய பைத்தியமாக இருப்பது கார்களின் மீது தான். அதற்காக வருடத்திற்கு 5, 6 கார்களை வாங்கி கொண்டு வருவாராம்.

ஜோதிகா: முதலில் சினிமாவிற்கு நுழைந்தும் இவர் நடிப்புக்கு பலரும் ஓவர் ஆக்டிங் என்று முத்திரை குத்தி வந்தார்கள். அதன் பிறகு ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களை முழுமையாக வசப்படுத்திக் கொண்டு கனவு கன்னியாக உலா வந்தார். அதன் பின் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட போதும் 45 வயது ஆகியும் சினிமாவிற்கு ரீ எண்டரி கொடுத்து ஹீரோயினாக ஜொலித்து வருகிறார். அதற்கு காரணம் இவருடைய கணவர் சூர்யா இவர் மேல் வைத்திருக்கும் அன்பு மட்டுமே காரணம்.

Also read: சூர்யா- ஜோதிகா காதலுக்கு உதவிய அஜித்தின் நண்பர்.. பல வருடத்திற்கு பின் லீக்கான சீக்ரெட்

Trending News