திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

90களில் மாடர்னாக கலக்கிய 6 நடிகைகள்.. நதியாவிற்கு டஃப் கொடுத்த ஹீரோயின்

தற்போது வருகிற படங்கள் அனைத்திலும் ஹீரோயின்கள் முக்கால்வாசி மாடர்ன் டிரஸ்ஸில் தான் நடிக்கும்படியாக இருக்கிறது. ஆனால் இவர்களுக்கெல்லாம் எல்லாம் முன் சில நடிகைகள் 90களில் மாடர்னாக வலம் வந்திருக்கிறார்கள். அப்பவே இவர்களுக்கு கச்சிதமாக பொருந்தி அவர்கள் போடும் ஒவ்வொரு காஸ்ட்யூம்சை வியந்து பார்க்க வைத்திருப்பார்கள். அப்படி 90களில் நடித்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

விஜயசாந்தி: இவர் படங்களை பார்க்கும் பொழுது உண்மையிலேயே இந்த நடிகை இவ்வளவு துணிச்சலாக இருக்கிறார் என்று நாம் நம்புற அளவிற்கு அதிரடியான திரைப்படங்களில் நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை விஜயசாந்தி. இவர் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் மொத்தம் 187 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார், லேடி அமிதாப் மற்றும் ஆக்சன் குயின் போன்ற பெயர்களை வாங்கி இருக்கிறார். மேலும் இவருடைய படங்களை பார்க்கும்போது மாடர்ன் விஜயசாந்தி ஆகவும் ரசிக்கும்படி நடித்திருப்பார்.

Also read: சினிமாவிலும், சீரியலிலும் வாய்ப்பில்லாமல்.. சம்பந்தமே இல்லாமல் டிவி ஷோவில் ஜட்ஜ் ஆன 5 பிரபலங்கள்

ரூபினி: இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவர் இயற்கையாகவே ரொம்பவே அழகான முகபாவனை கொண்டவர். அதிலும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் காதலிக்கும் பெண்ணாகவும், அடுத்ததாக மனிதன் படத்தில் காலை காலை முரட்டுக்காளை என்ற பாடலுக்கு இவர் போட்டு ஆடும் மாடர்ன் டிரஸ் அந்த காலத்திலேயே மெய்மறக்க செய்திருப்பார். அடுத்ததாக உழைப்பாளி படத்தில் ஒரு மைனா மைனா வரும் பாடலில் நம்முடைய முழு கவனமும் இவர் மேல தான் இருக்கும் அந்த அளவிற்கு மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கி இருப்பார்.

ரஞ்சிதா: இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து மிகவும் பரிச்சியமான நடிகையாக வந்தார். இவர் நடித்த எத்தனையோ படங்கள் மெகா ஹிட் படங்களாக வெற்றி பெற்று இருக்கிறது. அத்துடன் இவர் நடித்த ஜெய்ஹிந்த் படத்தில் மாடர்ன் ஆக கலக்கி இருப்பார். மேலும் தாயகம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வருவார்.

Also read: வெற்றிமாறன் படத்தில் அடம் பிடித்து நடித்த 5 இயக்குனர்கள்.. வட சென்னையில் மிரட்டி விட்ட ராஜன்

ரம்யா கிருஷ்ணன்: இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 260 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான நடிகையாக எல்லாரும் மனதிலும் ஆணி அடித்தது போல் பதிந்தது படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கேரக்டரில் மூலம் தான். அதிலும் படையப்பா படத்தில் ரஜினியை காதலிக்கும் இளம் வயதில் வரும் பொழுது அப்படியே வெளிநாட்டில் இருந்து வந்தது போல் மாடர்ன் டிரஸ்லியே உலா வந்திருப்பார்.

நதியா: 80களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நதியா. இவருடைய அழகுக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்ல பெண்களை கூட வசியம் செய்யும் அளவிற்கு இவருடைய முகத்தோற்றம் இருக்கும். அதிலும் அன்றைய காலகட்டத்தில் இவர் அணியும் உடை, ஹேர் ஸ்டைல், இவர் போடும் கம்மல், வித்தியாசமான டிரஸ் என்று உன்னிப்பாக இவரை பார்த்து ரசிக்கும் படியான ஒரு நடிகை.

நிரோஷா: இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ரசிகர்களை வசியம் செய்வதில் இவருக்கு இணையாக யாரும் இல்லை. அதிலும் முக்கியமாக கண்ணாலேயே மற்றவர்களை மயக்கக்கூடிய காந்த கண்ணழகி. இவர் பல படங்களில் ஆண்களுக்கு இணையாக சட்டை பேண்ட் போட்டு நதியாவிற்கு டப் கொடுக்கிற அளவிற்கு மார்டன் டிரஸ்ஸில் வந்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

Also read: விஜய் டாட்டா காமித்து கழட்டிவிட்ட 5 இயக்குனர்கள்.. வாரிசுக்கு பின் இருக்கும் அக்கட தேசம்

Trending News