புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்பட்டு கோவில் கட்டப்பட்ட 6 நடிகைகள்.. குஷ்பூவால் ஆரம்பித்த மட்டமான வேலை

Temples Built By Fans For Actresses: புராண காலங்களில் இருந்து கடவுளுக்காக கட்டப்படும் கோவில்கள் சில நடிகைகளுக்காகவும் கட்டி உள்ளனர். அதாவது நடிகையின் அழகில் மயங்கி ரசிகர்கள் அவர்களை கடவுளாக பார்த்து இவ்வாறு செய்திருக்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பலரும் எதிர்பார்க்காத விஷயமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் கோவில் கட்டப்பட்ட நடிகைகள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

குஷ்பூ : முன்பு கதாநாயகிகள் தேர்வு செய்யும்போது ஒல்லியாக இருந்தால் மட்டுமே ஹீரோயினாக முடியும் என்ற நிலை இருந்தது. அதை சுக்குநூறாக உடைத்து பப்ளியாக இருந்த குஷ்பூவை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இதன் காரணமாக குஷ்பூவால் தான் இந்தக் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு தொடங்கியது.

Also Read : 3 பெயர் மாற்றியும் காணாமல் போன கொழுக் மொழுக் நாயகி.. கிளாமரை நம்பி களமிறங்கிய குஷ்பூ ஜெராக்ஸ்

நமிதா : ஆறடி அரபிக் குதிரையாக இருக்கும் நமிதா கவர்ச்சி கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருந்தார். ஹாய் மச்சான் என்று சொல்லும் இவர் ஒரு வார்த்தைக்கு ரசிகர்கள் அனைவரும் அடிமையாக இருந்தனர். இந்நிலையில் குஷ்பூக்கு பிறகு நமிதாவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருந்தனர்.

நயன்தாரா : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு காலகட்டத்தில் நல்ல நிலையில் இருந்த பின்பு மார்க்கெட் சரிய தொடங்கியது. ஆனால் மீண்டும் கம்பேக் கொடுத்த நிலையில் யாரும் அசைக்கக்கூட முடியாத அளவுக்கு முன்னணி இடத்தை நயன்தாரா பிடித்திருக்கிறார். மேலும் நயன்தாராவுக்கும் ரசிகர்கள் கோவில் கட்டி இருந்தனர்.

Also Read : சொத்துக்களை மலை போல் குவித்து வைத்திருக்கும் டாப் 5 நடிகைகள்.. எல்லாவற்றிலும் நயன்தாரா முதல் இடத்தை பிடித்திடுவார் போல

சமந்தா : ஓ சொல்றியா மாமா என்ற பாடலில் சமந்தா ஆடிய ஐட்டம் நடனத்திற்கு இளைஞர்கள் அனைவரும் அடிமையாக இருந்தனர். சினிமாவில் கொடிகட்டி பறந்த சமந்தா தற்போது உடல்நிலை பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சமந்தாவின் அழகில் மயங்கி அவருக்கும் ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டிருந்தது.

நிதி அகர்வால் : சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நடித்தவர் தான் நிதி அகர்வால். இவருக்கும் சிம்புக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்தித்தாள்களில் கிசுகிசுக்கப்பட்டது. அதை நிதி அகர்வால் மறுத்துவிட்டார். இந்த சூழலில் சமீபத்தில் நிதி அகர்வாலுக்கும் ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டிருந்தது.

ஹன்சிகா மோத்வானி : ஹன்சிகா சினிமாவுக்கு வந்த புதிதில் சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பட்டார். அப்படியே குஷ்பூ சாயலில் இருந்த இவருக்கு ரசிகர்கள் எக்கசக்கம். அதேபோல் குஷ்பூவை தொடர்ந்து ஹன்சிகா மோத்வானிக்கும் ரசிகர்கள் கோயில் கட்ட தொடங்கினர். ஆனால் தனது ரசிகர்களிடம் இதை செய்ய வேண்டாம் என ஹன்சிகா கேட்டுக் கொண்டதை அடுத்து கோவில் கட்டுவதை கைவிட்டனர்.

Also Read : சமந்தாவின் மடியில் அமர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட குரங்கு.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

Trending News