புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கவர்ச்சி காட்டாமல் ஜெயித்து காட்டிய 6 நடிகைகள்.. நதியாவை பார்த்து பைத்தியமாய் சுற்றிய இளசுகள்

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை நடிகையாக நடிக்கும் ஹீரோயின்கள் படத்தின் கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பதுடன் அவ்வப்போது கவர்ச்சியும் காட்டி நடித்தால் தான் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற முடியும் என்று அதற்கேற்ற மாதிரி சில நடிகைகள் நடிப்பார்கள். ஆனால் அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக சில நடிகைகள் கவர்ச்சியை காட்டாமல் திறமை மூலம் ஜெயித்துக் காட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

ரேவதி: இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மற்றும் மலையாள படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து அனைவரும் மனதில் நச்சென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவர் தமிழில் மண்வாசனை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவருடைய இந்த நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியதால் இந்த படமும் வெள்ளி விழா கொண்டாடும் அளவிற்கு வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தால், கன்னி ராசி, ஆண் பாவம், புன்னகை மன்னன், உத்தம புருஷன், கிழக்கு வாசல், தெய்வவாக்கு, தேவர் மகன் போன்று பல வெற்றி படங்களில் நடித்த பெருமை இவரை சேரும். ஆனால் சினிமாவிற்கு ஹீரோயினா வந்த பிறகு அதுவும் முன்னணி நடிகையாக வந்துவிட்டால் கவர்ச்சி காட்டி தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி திறமை இருந்தால் போதும் என்று ஜெயித்து காட்டியவர்.

Also read: 56 வயதில் ரேவதிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. 32 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜோடி

சுகாசினி: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிகையாக முத்திரையை பதித்தவர். தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும் தர்மத்தின் தலைவன் போன்ற பல படங்களில் முன்னணி ஹீரோகளுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஆனாலும் எந்த காரணத்தை கொண்டும் கவர்ச்சி ஆக நடிக்க கூடாது என்று முடிவோடு இருந்து ஜெயித்து காட்டியவர்.

சித்தாரா: இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிகையாக பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய ஹிட் படமாக இதற்கு கை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து புதுப்புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், பாட்டு ஒன்று கேட்டேன், என்றும் அன்புடன் போன்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் இவரது படங்களில் கவர்ச்சியை காட்டாமல் கதைக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்ற மாதிரி நடித்துக் கொடுத்து குடும்ப பெண்ணாக அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார்.

ஊர்வசி: இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 702 படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், வனஜா கிரிஜா, இரட்டை ரோஜா போன்ற பல படங்களில் மூலம் வெற்றியை கொடுத்தவர். நான் எந்த படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கட்டுக்கோப்புடன் நடித்து அதற்கேற்ற மாதிரி மக்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

Also read: கன்னத்தோடு கன்னம் வைத்த அஜித், ஷாலினி.. திருமண நாளில் வெளியான ரொமான்டிக் போட்டோ

ஷாலினி: இவர் குழந்தை நட்சத்திரமாக 25 படங்களுக்கும் மேலாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழில் இவர் நடித்த பிள்ளை நிலா, ராஜா சின்ன ரோஜா, மைக்கேல் ராஜா போன்ற படங்களில் மிகவும் பிரபலமான குழந்தையாக எல்லாரும் மனதிலும் இடம் பிடித்தார். அதன்பிறகு தமிழில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பின் அமர்க்களம். கண்ணுக்குள் நிலவு. அலைபாயுதே. பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக உலா வந்தார். இவர் படங்களில் எந்தவித கவர்ச்சியும் காட்டாமல் நடித்து ஜெயித்துக் காட்டியவர்.

நதியா: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ஹீரோயினாக நடித்து இவருடைய முத்திரையை பதித்தார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மந்திர புன்னகை, உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் இவர் பின்னாடி சுற்றியவர்கள் ஏராளமானவர்.

Also read: 50 வயதை கடந்தும் இன்னும் ஹீரோயின் அந்தஸ்தை இழக்காத 5 நடிகைகள்.. ஏங்க விடும் நதியா

Trending News