சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோல்க்கு வந்த 6 ஆர்டிஸ்ட்டுகள்.. சித்தார்த் கேரக்டருக்கு பின் கைதட்டில் வாங்கிய அரவிந்த்

6 artists guest role in Singapore Saloon: தற்போது வெளிவரும் படங்கள் அனைத்தும் வசூலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் பெரிய பெரிய நடிகர்கள் அதிக அளவில் பட்ஜெட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அந்த மாதிரி படங்களை பார்க்கும் பொழுது எந்தவித கான்செப்ட் இருக்காது, அனைவருக்கும் புரியாத புதிராகவும் தான் இருக்கும்.

ஆனால் இதற்கு இடையில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்த படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது இதுதான் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு கதை ரொம்பவே நச்சென்று இருக்கிறது. அத்துடன் குடும்பத்துடன் பார்த்து மூன்று மணி நேரம் போகிறது கூட தெரியாத அளவிற்கு நம்மளை மிகவும் என்டர்டைன்மென்ட் ஆக ஆக்கி விடுகிறது.

அந்த வகையில் குட் நைட், போர் தொழில், சித்தா, ஜோ இன்னும் பல படங்கள் இருக்கிறது. இதே மாதிரி தற்போது வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படமும் முதல் பாதி சிரிப்புக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் ஆகவும் ஒரு பாசிட்டிவ் ஆகவும் கதை நகர்ந்து வருகிறது. ஆகமொத்தத்தில் சிங்கப்பூர் சலூன் குடும்பங்களை கவர்ந்து விட்டது.

Also read: ஆர்ஜே பாலாஜியை முந்தினாரா அசோக் செல்வன்.. சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் முதல் நாள் கலெக்ஷன்

அத்துடன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் முக்கியமான ஆறு கேரக்டர்கள் வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதில் அரவிந்த்சாமி வந்த கதாபாத்திரம் ரொம்பவே பாசிட்டிவாகவும் கைத்தட்டளை வாங்கக்கூடிய அளவிற்கு நச்சென்று ஒரு கதாபாத்திரத்தில் வந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு பின் இந்த ஒரு கதை இவருக்கு மிகவும் செட் ஆகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜிக்கு அப்பாவாக வந்து நடித்த தலைவாசல் விஜய், தற்போது காலத்தில் ஒரு அப்பா எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்று முன் உதாரணமாக கேரக்டர் கச்சிதமாக இருக்கும். முக்கியமாக பாய் பெஸ்டிக்கு இப்படி ஒரு விளக்கத்தை யாராலும் கொடுத்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ஆர்.ஜே பாலாஜி அப்பாவிடம் எக்ஸ்ப்ளைன் பண்ணி இருப்பாரு.

அடுத்ததாக ரோபோ சங்கர் காமெடியும் குணச்சித்திர கதாபாத்திரத்தையும் சேர்த்து நடிப்பை மிகவும் பிரமாதமாக கொடுத்திருப்பார். அடுத்து சாச்சா, தான் எந்த ஒரு செயலையும் பிடித்து செய்தால் அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று விளக்கத்தை கொடுத்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் தான் மைக்கேல். இவர்களைத் தொடர்ந்து ஜீவா மற்றும் லோகேஷ் கெஸ்ட் ரோலில் வந்து படத்திற்கு முழு ஆதரவையும் கொடுத்திருக்கிறார்கள்.

Also read: வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்ஜே பாலாஜி.. ரணகளமாக வந்திருக்கும் சிங்கப்பூர் சலூன் ட்விட்டர் விமர்சனம்

Trending News