திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கேப்டனின் அசரவைக்கும் நடிப்பில் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் 6 படங்கள்.. அடையாளத்தை கொடுத்த ஆனஸ்ட் ராஜ்

Vijayakanth 6 best Movies: கேப்டன் விஜயகாந்த் இன்று தன்னுடைய 71ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சினிமாவில் இவர் நடித்த காலம் பொற்காலம் என்றே சொல்லலாம். அவருடைய படங்கள் இன்றளவும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த 6 படங்களை இப்போது பார்க்கலாம்.

கேப்டன் பிரபாகரன் : விஜயகாந்தின் நூறாவது படமாக வெளியானது தான் கேப்டன் பிரபாகரன். ஆர்கே செல்வமணி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சரத்குமார் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் மன்சூர் அலிகான் வில்லத்தனமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் மூலம் தான் விஜயகாந்த்க்கு கேப்டன் என்ற பட்டம் கிடைத்தது.

Also Read : படையோட வலிமை தலைவன் கொடுக்கிற நம்பிக்கையில தான் இருக்கு.. கேப்டன் மகனின் அசரவைக்கும் கிளிம்ஸ் வீடியோ

ரமணா : ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் ப்ரொபசர் ரமணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட்டான படம் தான் ரமணா. இந்த படத்தில் சிம்ரன், யூகி சேது மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விஜயகாந்த் புள்ளி விவரத்துடன் சொல்லும் டயலாக் இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

வானத்தைப்போல : விக்ரமன் இயக்கத்தில் அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியான படம் தான் வானத்தைப்போல. இந்த படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரபுதேவா, மீனா, கௌசல்யா, லிவிங்ஸ்டன் போன்ற பல பிரபலங்களும் நடித்திருந்த நிலையில் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : ஜவானால் மீண்டும் அசிங்கப்பட போகும் அட்லி.. விஜயகாந்த் படத்தை காப்பி அடித்ததால் வந்த விளைவு

சின்ன கவுண்டர் : ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, செந்தில், கவுண்டமணி என எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர். விஜயகாந்தின் கேரியரில் மிகப்பெரிய மைல் கல்லாக சின்ன கவுண்டர் படம் அமைந்தது.

சத்ரியன் : கே சுபாஷ் இயக்கத்தில் மணிரத்தினம் தயாரிப்பில் விஜயகாந்த், பானுப்பிரியா, ரேவதி, விஜயகுமார் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சத்ரியன். இந்த படத்தில் பன்னீர்செல்வம் என்ற மிடுக்கான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து விஜயகாந்த் அசத்தி இருப்பார்.

ஆனஸ்ட் ராஜ் : கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜயகாந்த், கௌதமி, மனோரமா, நிழல்கள் ரவி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் ஆனஸ்ட் ராஜ். விஜயகாந்துக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம் இதுதான். இப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக கனகச்சிதமாக விஜயகாந்த் பொருந்தி இருப்பார்.

Also Read : அஜித்தை ஒருமையில் கண்டபடி திட்டிய விஜயகாந்த்.. எதற்கும் அசராதவனாக இருந்து வென்று காட்டிய ஏகே.!

Trending News