திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியை வெற்றி நாயகனாக மாற்றிய அண்ணாமலை.. படத்தில் கவனிக்கப்பட வேண்டிய இந்த 6 காட்சிகள்

31yearsofAnnamlai: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, சரத்பாபு, ராதாரவி ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாமலை. இந்த படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 31 வருடங்கள் ஆகிறது. அண்ணாமலை ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் பேவரிட் திரைப்படமாக இல்லமால், தமிழ் சினிமாவின் பல பிரபலங்களுக்கு பிடித்த படமாக இருக்கிறது. தளபதி விஐய் கூட அவருடைய அப்பாவிடம் அண்ணாமலை வசனத்தை பேசி தான் தனக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை தெரியப்படுத்தியதாக பல மேடைகளில் சொல்லியிருக்கார். 31 வருடங்கள் ஆகும் அண்ணாமலை படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஆறு காட்சிகள் இருக்கின்றன.

நண்பர்களாக இருக்கும் அசோக் மற்றும் அண்ணாமலை எந்த பாகுபாடும் இன்றி ஒன்றாக பழகுவார்கள். பணக்காரனாக இருக்கும் அசோக் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலை கட்ட வேண்டும் என்று திட்டமிடும் பொழுது, அதன் பக்கத்தில் இருக்கும் அண்ணாமலையின் இடத்தை கேட்பார். அண்ணாமலை அந்த நேரத்தில் சற்று யோசிக்காமல் உனக்கு தானே வேண்டும் சரி எடுத்துக்கோ என்று தன்னுடைய நண்பனுக்காக விட்டுக் கொடுக்கும் காட்சி ரொம்பவும் சென்டிமென்ட் ஆக இருக்கும்.

Also Read:சாதிய பெருமை பேசிய 7 தமிழ் படங்கள்.. நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்

அசோக்கால் ஏமாற்றப்பட்டு அவருடைய வீட்டிற்கு சென்று அண்ணாமலை பேசும் காட்சி இன்று வரை தமிழ் சினிமாவின் ஹைலைட் சீன் என்று தான் சொல்ல வேண்டும். அசோக்கிடம், அண்ணாமலை சவால் விடும் பொழுது அந்தக் காட்சியை பார்க்கும் அத்தனை பேரிடமும் அண்ணாமலையின் ஏமாற்றம், கோபம் அத்தனையும் பிரதிபலிப்பாகும். இன்று வரை இந்த காட்சி தமிழ் சினிமாவில் உபயோகப்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

தன்னுடைய நண்பனால் வஞ்சிக்கப்படும் அண்ணாமலை கடுமையாக உழைத்து முன்னேறி பணக்காரராவதோடு, தொழிற்சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார். அப்போது அண்ணாமலை சிகரெட் பிடித்துக் கொண்டே அசோக்கிடம் ‘மலைடா’ என்று ஒரு வசனத்தை பேசுவார். அது இன்று வரை படம் பார்ப்பவர்களுக்கு மெய்சிலிர்க்கும் காட்சியாகவே இருக்கும்.

Also Read:ஓவர் ஹீரோயிசத்தால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட 5 படங்கள்.. டெபாசிட் இழந்த சூப்பர் ஸ்டாரின் படம்

தொழிற்சங்க தேர்தலில் தோற்றுப் போன அசோக், அண்ணாமலையை ஜெயிப்பதாக நினைத்து ஒரு கட்டிடத்தை ஏலம் எடுக்க முயற்சி செய்வார். அந்த தவறான முயற்சியால் கடனில் மூழ்கும் அசோக், தன்னுடைய வீட்டை அண்ணாமலையிடம் பறிகொடுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை வரும். அசோக் தனக்கு செய்ததை திரும்பி அவனுக்கு நான் செய்து விடக்கூடாது என்று நினைக்கும் அண்ணாமலை அந்த சொத்துக்களை தன் அம்மாவிடம் கொடுத்து அவரிடமே திருப்பிக் கொடுக்க சொல்லிவிடுவார். அப்பொழுது கெட்டுப் போனவன் வாழலாம், ஆனால் நல்லா வாழ்ந்தவன் கெட்டுப் போகக்கூடாது என்ற வசனத்தையும் பேசி இருப்பார். இது ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றது.

நிழல்கள் ரவியால் தன்னுடைய தங்கை கொடுமைப்படுத்தப்படுவதை தெரிந்து கொண்ட ரஜினி அவருடைய தங்கையிடம், ஒன்னும் தெரியாமல் இருக்க நான் ஒன்னும் பழைய பால்கார அண்ணாமலை இல்லை என்று ஒரு வசனம் பேசி இருப்பார். அதேபோல் புருஷன் வீட்டில் நடப்பதை வெளியில் சொல்லுறவ பொம்பளை இல்ல, தங்கச்சிக்கு ஒன்னு நடக்கும் போது தட்டி கேட்காத அண்ணன் ஆம்பளை இல்லை என்ற ஒரு வசனத்தை பேசி விட்டு அடுத்த காட்சியிலேயே நிழல்கள் ரவியை போட்டு புரட்டி எடுப்பார்.

படத்தின் இறுதியில் தன்னுடைய மகள் அசோக்கின் மகனை காதலிக்கும் விஷயம் தெரிந்து மகளிடம் அன்பாக பேசும் பொழுதும் சரி, தன்னுடைய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் போதும் சரி அந்த காட்சியில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி. அதில் தன் அம்மாவிடம் நான் யாரையெல்லாம் அதிகம் நம்புகிறேனோ அவர்கள் எல்லாம் என் நெஞ்சில் எட்டி உதைக்கிறார்கள் என்று சொல்லும் வசனம், மேலும் குஷ்பூ இந்த வீட்டில் எல்லாமே இருக்கிறது ஆனால் நிம்மதி தான் இல்லை என்று சொல்லும் வசனமும், பணம் மற்றும் புகழ் இருந்தும் அண்ணாமலைக்கு தான் நிம்மதியாக இருந்த பழைய வாழ்க்கை என்பது கிடைக்கவில்லை என ரசிகர்களுக்கு புரியும்.

Also Read:மயில் நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினி.. கமலுக்கே இல்ல, உங்களுக்கு எப்படி?

Trending News