சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஸ்ரீதேவி நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 6 படங்கள்.. என்றைக்கும் நினைவில் இருக்கும் மயிலு

Sridevi Blackbuster Movies: எத்தனை நடிகைகள் வந்திருந்தாலும் தவிர்க்க முடியாத நடிகைகளின் லிஸ்டில் முதலிடத்தில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் நடிகை ஸ்ரீதேவி. எதார்த்தமான நடிப்பையும், நடனத்திலும் இவரை மிஞ்சும் அளவிற்க்கு யாரும் இல்லை என்று அனைவரையும் கட்டிப்போட்டவர். அப்படிப்பட்ட இவருடைய 60-வது பிறந்தநாளை முன்னிட்டு இவர் சினிமாவில் படைத்த சாதனைகளைப் பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

ஆரம்பத்தில் முருகன் வேடத்தில் கந்தன் கருணை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பத்து படங்களுக்கும் மேலாக குழந்தை கதாபாத்திரமாக நடித்து இருக்கிறார். அந்த வகையில் ஹீரோயினாக அறிமுகமான படம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படம். இப்படம் தான் இவர் ஹீரோயின் ஆக ஆனதற்கு அஸ்திவாரமாக அமைந்தது.

Also read: 40 வயதில் பாலிவுட் கேரியரை தொடங்கிய 5 நடிகைகள்.. கபூர் குடும்பத்தின் மருமகளாக கலக்கிய ஸ்ரீதேவி

அடுத்ததாக பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே என்ற படத்தில் நடித்து பரட்டை மற்றும் சப்பாணி கேரக்டர் எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதற்கு மேலேயும் இவருடைய மயிலு கதாபாத்திரம் தற்போது வரை மறக்க முடியாமல் அனைவரது மனதிலும் கொடி கட்டி பறக்கிறது. இப்படம் தான் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இதனைத் தொடர்ந்து கமலஹாசன் நடித்த மூன்றாம் பிறை திரைப்படத்தில் வெகுளியான, அசாத்தியான நடிப்பை காட்டி இருப்பார். அத்துடன் கமலுக்கு ஜோடியாக வாழ்வே மாயம், சிகப்பு ரோஜாக்கள், கல்யாணராமன், நீலமலர்கள், தாய் இல்லாமல் நான் இல்லை, குரு, வறுமை நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா இன்னும் போன்ற நிறைய படங்கள் நடித்து இருக்கிறார்.

Also read: ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த பதினாறு வயதினிலே ‘பரட்டை’.. ஸ்ரீதேவியை விட கம்மி சம்பளம் வாங்கிய சூப்பர்ஸ்டார்!

அதே மாதிரி ரஜினியுடன் கிட்டத்தட்ட 22 படங்களில் ஜோடி சேர்ந்திருக்கிறார். அதில் மிகவும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆன படங்கள் மூன்று முடிச்சு, பிரியா, ஜானி, போக்கிரி ராஜா, ராணுவ வீரன், நான் அடிமை இல்லை போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. அத்துடன் சிவாஜி நடிப்பில் வெளிவந்த கவரிமான் என்ற படத்தில் இவருடைய மகளாகவும், அதன் பின் சந்திப்பு என்கிற படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகும் நடித்து அதிக கைதட்டில் வாங்கி இருக்கிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னட போன்ற படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார். அப்படிப்பட்ட இவருடைய நடிப்பில் மறக்கவே முடியாத படங்களான 16 வயதினிலே, வாழ்வே மாயம், சிகப்பு ரோஜாக்கள், குரு, ஜானி மூன்றாம் பிறை போன்ற படங்களில் இவருடைய கதாபாத்திரம் இன்றும் மக்கள் மனதில் நிலையாக நிலைத்துக் கொண்டிருக்கிறது.

Also read: சிவாஜியுடன் நடித்து எம்ஜிஆர் உடன் நடிக்காமல் போன 5 நடிகைகள்.. கடைசி வரை ஆசைப்பட்ட ஸ்ரீதேவி

Trending News