வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே படத்தில் இணைந்து நடித்து திருமணம் செய்து கொண்ட 6 ஜோடி.. சினேகாவின் மீது காதல் வலையில் விழுந்த பிரசன்னா

Sneha Prasanna: பொதுவாக சினிமாவில் நடித்த பிரபலங்கள் பல படத்தில் தன்னுடன் ஜோடி போட்டதன் மூலம் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு படத்தில் ஜோடி போட்டதன் மூலமாகவே திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் இருக்கிறார்கள். அவ்வாறு உள்ள 6 பிரபலங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கௌதம் கார்த்திக், மஞ்சுமா மோகன் : சமீபத்தில் இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் படங்களில் இப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தேவராட்டம் படத்தில் மஞ்சுமா மோகனுடன் ஜோடி போட்ட நிலையில் அவர் மீது காதலில் விழுந்துள்ளார் கௌதம் கார்த்திக்.

Also Read : கூச்சநாச்சமே இல்லாம வெளிவந்த ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. கேரியரையே தொலைத்த கௌதம் கார்த்திக் 

ஆதி, நிக்கி கல்ராணி : நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கள் இருவரும் மரகத நாணயம் படத்தில் நடித்ததன் மூலம் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவ்வப்போது இருவரும் எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

ஆர்யா, சாயிஷா : கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா நடித்து இருந்தனர். இதன் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பிறகு மீண்டும் டெடி என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர்.

Also Read : ஆர்யாவை ஓவர் டேக் செய்ய வரும் டான்சிங் ரோஸ்.. வேற லெவலில் உருவாகும் கூட்டணி

பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் : 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தில் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் ஜோடி போட்டு நடித்து இருந்தனர். இதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்து 2016 இல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியினருக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரசன்னா, சினேகா : பிரபல நடிகையான சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் பிரசன்னா உடன் இணைந்து நடித்திருந்தார். இதன் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் தற்போது சினேகா தனக்கு வரும் வாய்ப்புகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

அஜித், ஷாலினி : அஜித் அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஒரே ஒரு படத்தில் நடித்ததன் மூலமாகவே இவர்களுக்குள் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. இப்போதும் செம ரொமான்டிக்காக இருக்கும் இந்த தம்பதியினரின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Also Read : ஆஸ்கருக்கு தயாராகும் அஜித்.. யாரும் எதிர்பார்க்காத புது அவதாரம் எடுக்கும் ஏ கே

Trending News