வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விவாகரத்திற்கு பிறகும் திருமணம் செய்து கொள்ளாத 6 பிரபலங்கள்.. காதலியின் நினைவுடனே வாழும் காதல் கிறுக்கன்

6 Celebrities Who Didn’t Marry Even After Divorce: இப்போதெல்லாம் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக் கொண்ட பிரபலங்கள், மறுபடியும் திருமணம் செய்து கொள்ளாமல் ‘ஒரு செடியில் ஒரு ஃப்ளவர்னு’ பழைய வாழ்க்கையின் நினைவுடனே சிலர் காலத்தை ஓட்டுகின்றனர். அப்படிப்பட்ட 6 பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

ரேவதி: 80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையான ரேவதியின் நடிப்பும் திறமையும் சொல்லி தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சினிமாவில் எந்தவித கவர்ச்சியும் காட்டாத ரேவதி, நடிகர் சுரேஷ் சந்திர மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது 16 வருட திருமண வாழ்க்கைக்கு அடையாளமாய் ஒரு குழந்தை இல்லையே என்றே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

11 வருடம் பிரிந்து வாழ்ந்த அவர்கள் 2013ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றனர். கணவரை பிரிந்த பின் ரேவதி, செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார். தன்னுடைய 48-வது பிறந்தநாளில் குழந்தையை அறிமுகப்படுத்திய ரேவதி, இன்றும் வேறு யாரையுமே திருமணம் செய்து கொள்ள விரும்பாமல், சுரேஷ் சந்திர மேனனை நினைத்தே வாழ்ந்து வருகிறார்.

பார்த்திபன்: இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் வித்தியாசத்திற்கு பெயர் போனவர். அவர் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் காதல் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துவிட்டது. விவாகரத்துக்கு பிறகு சீதா சீரியல் நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அதுவும் நிலைக்காமல் போனது. ஆனால் பார்த்திபன் இந்த ஜென்மத்தில் தன்னுடைய மனைவி சீதா தான் என வேறு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

பிரசாந்த்: 17 வயதிலேயே சினிமாவில் ஹீரோவாக என்ட்ரியான நடிகர் பிரசாந்த் தொடர்ந்து திருடா திருடா, ஜீன்ஸ், ஜோடி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இவர் புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 4 வயதில் மகள் இருந்த விஷயம் பிரசாந்துக்கு பின்னர் தான் தெரிய வந்ததால், அவரை விவாகரத்து செய்தார். அதைத்தொடர்ந்து பிரசாந்தின் அப்பாவும் இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் விரைவில் தன்னுடைய மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகவும் கூறினார். ஆனால் 50 வயதான பிரசாந்துக்கு இன்னும் திருமணம் நடக்கல.

Also Read: ஒரே போட்டோவால் தலைவரை பங்கம் செய்த ப்ளூ சட்டை.. இது என்ன லால் சலாமுக்கு வந்த சோதனை

பிரிந்து வாழ்ந்தாலும் 2வது திருமணம் செய்து கொள்ளாத 6 பிரபலங்கள்

சோனியா அகர்வால்: தன்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சோனியா அகர்வால் குறுகிய காலத்திலேயே அவரை விவாகரத்து செய்து விட்டார். விவாகரத்திற்கு பிறகு செல்வராகவன் வேறொரு திருமணம் செய்து கொண்டாலும், சோனியா அகர்வால் இன்னும் வேறொரு திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார்.

சமந்தா- நாக சைதன்யா: அடுத்த அஜித்- ஷாலினி போல் சமந்தாவும் நாக சைதன்யாவும் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக இருப்பார்கள் என ரசிகர்கள் பலரும் இவர்களது திருமணத்தின்போது நினைத்தனர். 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2021ல் விவாகரத்து பெற்றனர். ஆனால் விவாகரத்து ஆன பிறகும் இன்று வரை இருவரும் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திடீரென்று தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 வருடம் சேர்ந்து வாழ்ந்த திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். ஆனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்தாலும் எங்கு சென்றாலும் இரண்டு மகன்கள் தான் செய்கின்றனர். அதேபோல் வேறு ஒரு திருமணத்தைப் பற்றி தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் இப்ப வரை யோசிக்கவில்லை.

Also Read: பாசத்தை மட்டும் விட்டுக் கொடுக்காத தனுஷ்.. மறைமுகமாக ஐஸ்வர்யாவிற்காக செய்யும் காரியம்

Trending News