திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வயது வித்தியாசம் பார்க்காமல் மீனா ஜோடி போட்ட 6 பிரபலங்கள்.. 28 வயசு கேப் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்

Actress Meena: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் தன் திறமையால் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இருப்பினும் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து இருக்கிறார்.

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத முகமாய், மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டு வந்த நடிகை தான் மீனா. தன் அழகாலும், நடிப்பாலும் இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் வெற்றி கண்டன. அவ்வாறு வயதை பொருட்படுத்தாது 6 பிரபலங்களுடன் இணைந்து கலக்கிய படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: ரஜினியை பார்த்து வளர்ந்து தற்போது எதிர்த்து நிற்கும் 5 ஹீரோக்கள்.. மாமனாரை ஓரம்கட்ட நினைக்கும் தனுஷ்

1994ல் குரு தனபால் இயக்கத்தில் வெளிவந்த தாய்மாமன் படத்தில் சத்யராஜ் உடன் இணைந்து நடித்திருப்பார் மீனா. இவர்களின் ஜோடி பொருத்தம் பார்ப்பவர்கள் இடையே பெரும் வித்தியாசம் காட்டிக் கொடுத்திருக்கும். அவ்வாறு சுமார் 22 வயது வித்தியாசத்தில் இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் மீனா.

அதேபோல் 1991ல் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் சுமார் 28 வயது வித்தியாசத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்திருப்பார் மீனா. இருப்பினும் தன் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி நல்ல விமர்சனத்தை பெற்றிருப்பார்.

Also Read: அவர் போட்ட விதை விருட்சமா வளந்து நிக்குது.. இன்று ரிலீசான 7 படங்களை ஓரம்கட்டி கெத்து காட்டிய கமல்

மேலும் சுந்தர் சி இயக்கத்தில் 2001ல் வெளிவந்த ரிஷி படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக சுமார் 22 வயது வித்தியாசத்தில் இணைந்து இருப்பார் மீனா. இப்படத்தில் இவர்களின் வயது வித்தியாசம் தெரியாத அளவிற்கு சிறப்புற நடித்திருப்பார்கள். மேலும் திரிஷ்யம் படத்தில் மோகன்லாலுடன் 17 வயது வித்தியாசத்தில் நடித்த மீனாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும்.

அதை தொடர்ந்து அவ்வை சண்முகி படத்தில் 22 வயது வித்தியாசத்தில் கமலுடன் இணைந்து நடித்திருப்பார். இப்படமும் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும் ரஜினியுடன் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர்கள் இருவர் இடையே சுமார் 26 வயது வித்தியாசம் இருந்தும் அவற்றை வெளிப்படுத்தாது இவர்களின் ஜோடி பொருத்தம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

Also Read: கடைசி நேரத்தில் ஹீரோவை மாற்றிய 5 படங்கள்.. அட ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க வேண்டிய ஹீரோ இவரா!

Trending News