வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிஞ்சிலேயே பழுக்க வைக்கப்பட்டு கேரியரை தொலைக்கும் 6 நடிகைகள் .. கிளாமரில் முகம் சுளிக்க வைத்த அஜித்தின் ரீல் மகள்

Anikha Surendran: சினிமாவில் ஒரு சில காட்சிகளுக்காக நடிக்க வைக்கப்படும் குழந்தை நட்சத்திரங்கள் அதன் பின்னர் சினிமாவை தன்னுடைய வாழ்க்கையாக நினைத்து அதற்குள்ளேயே மூழ்கி விடுகிறார்கள். அவர்களின் வயதின் காரணமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தங்களை வளர்ந்த நடிகைகளாக காட்டிக் கொண்டு இந்த குழந்தை நட்சத்திரங்கள் செய்யும் ஒரு சில வேலைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விடுகிறது. ஒரு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களின் லாபத்திற்காக இந்த குழந்தைகளை பிஞ்சிலேயே பழுக்க வைத்து விடுகிறார்கள்.

அனிகா: நடிகர் அஜித்குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் அந்த ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதன் பின்னர் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து ஒரிஜினலாகவே இப்பொழுது அஜித்தின் மகள் என்றே அடையாளப்படுத்தப்படுகிறார். இவர் தொடர்ந்து நிறைய கிளாமர் போட்டோக்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் சமீபத்தில் இவர் நடித்த படத்திலும் லிப் லாக் காட்சியில் நடித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார்.

Also Read:பிளாப் படங்களை கம்மியா கொடுத்த 2 ஹீரோக்கள்.. விஜய், அஜித் எல்லாம் இந்த லிஸ்ட்ல இல்ல

ரவீனா: நடிகை ரவீனா ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில வருடங்களிலேயே விஜய் தொலைக்காட்சியின் மௌன ராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இந்த நாடகம் முடிந்த நிலையில் இவர் சமூக வலைதள பக்கங்களில் அதிக கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கேபிரியலா: விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சிகளில் குழந்தையாக கலந்து கொண்ட கேபிரியலா, தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருப்பார். அதற்கு அடுத்து அவர் நடித்த அப்பா திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஆனால் தற்போது ஈரமான ரோஜா சீரியல் இவர் கொஞ்சம் ஓவர் கிளாமர் காட்சிகளிலும் நடித்து வருகிறார்.

ஷ்ரேயா சர்மா : தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் அவர்களது மகளாக நடித்தவர் தான் நடிகை ஷ்ரேயா சர்மா. தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் சமீபத்தில் படு கிளாமராக பட வாய்ப்புக்காக களத்தில் இறங்கி இருக்கிறார்.

Also Read:அஜித்தால் மார்க்கெட்டை இழந்த நடிகை.. இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்

சாரா அர்ஜுன் : நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் அவருடைய மகளாக நடித்தவர் தான் சாரா அர்ஜுன். மூன்று அல்லது நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தையாக அந்த படத்தில் நடித்த சாரா அதன்பின்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்திருந்தார்.

எஸ்தர் : உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் அவருடைய இரண்டாவது மகளாக எஸ்தர் நடித்திருப்பார். மூத்த மகளாக நடித்த நிவேதா தாமஸ் கூட குழந்தை நட்சத்திரம் தான். இதில் எஸ்தருக்கு அடுத்தடுத்த படங்கள் அமையவில்லை என்றாலும் சமீபத்தில் கிளாமர் போட்டோ சூட் கலை நடத்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

Also Read:விஜய், அஜித் படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்.. இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட மாமன்னன்!

Trending News